சற்று முன்
Home / செய்திகள் / ஈபிடிபி உறுப்பினர் குகேந்திரன் யாழ் மாநகர அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை

ஈபிடிபி உறுப்பினர் குகேந்திரன் யாழ் மாநகர அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை

ஈ.பீ.டீ.பியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வேலும்மயிலும் – குகேந்திரன் எதிர் வரும் ஓகஸ்ட் – 03ம் திகதிவரை சபை அமர்வுகளில் அமரவோ வாக்களிக்கவோ முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தினம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் ஈ.பீ.டீ.பி கட்சியை சேர்ந்த வேலும்மயிலும் – குகேந்திரன் இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்க முடியாது. என்ற காரணத்தினால் குகேந்திரனின் மாநகர சபை உறுப்புறுமை செல்லுபடியற்றது . என தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவிடக்கோரி தமுழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கினை நேற்றைய தினம் மேன் முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்காக எடுத்துக்கொண்டது . இதன்போது உறுப்பினர் லோகதயாளன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ம.ஆ.சுமந்திரன் ம6்றும் நிரான் , செல்வி ஜே.அருளானந்தம் ஆகியோர் ஆயராகினர். குறித்த வழக்குத் தொடர்பில் வேலும்மயிலும் – குகேந்திரன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வுகளில் அமரவோ அல்லது வாக்களிக்கவோ எதிர்வரும் 3ம் திகதிவரை இடைக்கால தடை விதித்ததோடு குறித்த வழக்கினை எதிர்வரும் 3ம் திகதிக்கு நீதிபதிகளான பத்மன் சூறசேன மற்றும் அர்ச்சுனா ஒபயசேகர ஆகியோர் ஒத்திவைத்திவைத்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com