சற்று முன்
Home / செய்திகள் / இளைஞர் மீது தாக்குதல் – மானிப்பாயில் சம்பவம்

இளைஞர் மீது தாக்குதல் – மானிப்பாயில் சம்பவம்

யாழில் நேற்று இரவு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இனுவில் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரொருவரே காயமடைந்துள்ளார். மானிப்பாய் ஆனந்தன் வைரவர் ஆலய சந்தியில் இரவு எட்டு மணியளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூரிய ஆயுதத்துடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே இவ்வாறு குறித்த நபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் முகத்தை கருப்பு துணியால் மூடி இருந்ததாகவும், வாகன இலக்க தகடுகள் அகற்றப்பட்டு இருந்ததாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com