சற்று முன்
Home / செய்திகள் / இலஞ்சம் வாங்கிய பிரதேச செயலருக்கு 05 வருட கடூழிய சிறை

இலஞ்சம் வாங்கிய பிரதேச செயலருக்கு 05 வருட கடூழிய சிறை

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக அக்குரனை முன்னாள் பிரதேச செயலாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடுமையான உழைப்புடன் 05 ஆண்டு சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறுகின்றார்.

அத்துடன் குற்றவாளிக்கு 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 50,000 ரூபா பணத்தை தண்டனையாக மீளப் பெறுவதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு கருங்கல் வியாபாரி ஒருவருக்கு வெடி மருந்துக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுப்பதற்கு இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு பிரதிவாதிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com