சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையில் 10 நாட்களுக்கு அவசர கால நிலமை பிரகடனம் !!

இலங்கையில் 10 நாட்களுக்கு அவசர கால நிலமை பிரகடனம் !!

நாட்டில் எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசர கால நிலமையை பிரகடணப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று (06) நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னரே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

10 நாட்களுக்கு அவசரகால நிலமையை பிரகடனம் செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரம் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான வர்த்தமானி வௌியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் நடைபெற்றுவந்த மோதல்களையடுத்து 30 ஆண்டு காலமாக நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அரசினால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com