சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையின் 300 இணையத் தளங்கள் மீது விடுதலைப் புலிகள் பெயரில் தாக்குதல்

இலங்கையின் 300 இணையத் தளங்கள் மீது விடுதலைப் புலிகள் பெயரில் தாக்குதல்

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இலங்கையின் 300 – க்கு மேற்பட்ட இணையத்தளங்கள் மீது இன்று காலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு தமிழீழம் சைபர் போர்ஸ் எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் கிரு ஊடகம், அமைச்சரவை அலுவலக குடியரசு இணையம் , தூதுவராலயங்கள் இணையத்தளங்கள், அரச நிர்வாக இணையங்கள் மற்றும் அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கோத்தபாயவின் ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் சைபர் வழித்தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படை ஒன்றையும் அமைத்தநிலையில் இன்று இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவையே ஆட்டம்காண வைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com