சற்று முன்
Home / செய்திகள் / “இறுதிப் போரை நான்தான் வழிநடத்தினேன்” – புலிகளுக்கு அஞ்சி மகிந்தவும் கோத்தாவும் தப்பி ஓடிவிட்டனர் என்கிறார் மைத்திரி

“இறுதிப் போரை நான்தான் வழிநடத்தினேன்” – புலிகளுக்கு அஞ்சி மகிந்தவும் கோத்தாவும் தப்பி ஓடிவிட்டனர் என்கிறார் மைத்திரி

போரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று தெரிவித்திருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக் காலப்பகுதியில் பதில் பாதுகாப்பு அமைச்சராக நாட்டில் தான் இருந்ததாகவும் எனவே போரின் இறுதி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது ஏனையவர்களை விட தனக்கே அதிகம் தெரியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியூயோர்க்கில், சிறிலங்கா சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.

‘போரின் இறுதி இரண்டு வாரங்களில், சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானத்தைப் பயன்படுத்தி கொழும்பு நகரில் குண்டுத் தாக்குதலை நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்தது.

அதனால் தான், போர்க்காலத்தில் உயர்மட்டத் தலைவர்களாக இருந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் போரின் இறுதி இரண்டு வாரங்களிலும் நாட்டில் இருக்கவில்லை.

அவர்கள் நாடு திரும்பும் வரை, பதில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த- இறுதிக் கட்டத்தில் இவர்கள் எல்லோரும் ஏன் நாட்டை விட்டு வெளியேறினர் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும்.

எனவே, போரின் இறுதி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது ஏனையவர்களை விட எனக்குத் தெரியும் – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com