சற்று முன்
Home / செய்திகள் / இராணுவ பிடியிலுள்ள கால்நடைகளை மீட்கத் தவறிய பிரதேச செயலகம்

இராணுவ பிடியிலுள்ள கால்நடைகளை மீட்கத் தவறிய பிரதேச செயலகம்

முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படையினர் முகாமில் நிற்கும் கால்நடைகளை பிடித்து செல்லுமாறு கடற்படையினர் பிரதேச செயலகத்திற்கு அனுமதி வழங்கியபோதும் அதனை நிறைவேற்ற பிரதேச செயலகம் தவறிவிட்டதாக கால்நடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள 617 ஏக்கர் கடற்படையினரின் பாவனைக்காக அபகரித்துள்ள பிரதேசத்திற்குள் சுமார் நூறு மாடுகள் அகப்பட்டுள்ளன. இவ்வாறு அகப்பட்டுள்ள மாடுகளை மீட்டுத்தருமாறு கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டச் செயலகம் ஊடாக கோரிக்கை விடுத்தோம். அதாவது
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல்ப் பகுதியில் மக்களின் வாழ்விடத்தினை மட்டும் கடற்படையினர் அபகரிக்கவில்லை. இப்பகுதி மக்களின் ஜீவனோபாயத்திற்கான கால்நடைகளைக்கூட அடாத்தாகப்பிடித்து முற்கம்பி வேலிகளிற்குள் வைத்து அதன் வருமானங்களை ஈட்டுகின்றனர். ஆனால் இதன் உரிமையாளராகிய நாம் விலை கொடுத்துப் பால் வாங்கும் நிலையில் உள்ளதனையும் சுட்டிக்காட்டினோம்.

இதனையடுத்து நீண்ட முயற்சிகள் உடுக்கப்பட்டு முகாம் பகுதியில் உள்ள கால்நடைகளை பிடிப்பதற்கு படையினர் அனுமதித்தனர் . அதனையடுத்து குறித்த கால்நடைகளை பிடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. இருப்பினும் சுமார் 10 மாடுகள்கூட பிடிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த முயற்சி கைவிடப்பட்டது.்எனவே எஞ்சிய மாடுகளையும் பிரதேச செயலகம் பிடித்து தர வேண்டும். எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த கணற்படையில் கால் நடைகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து அப்போது குறித்த கடற்படை முகாம் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பிடிப்பதற்கான அனுமதியும் பெறப்பட்டது. அதன் பயனாக முன்னாள் பிரதேச செயலாளர் மாடுகளை பிடிக்கக்கூடியவர்களை தேடிப் பிடித்து கூட்டிச் சென்று முதலில் தடம் வைத்து பிடிக்க முயன்றனர் அப்போது ஒரு மாடி மட்டுமே அகப்பட்டது. அதன் பின்னர் நேரடியாகவே துரத்திப் பிடித்தனர் அதன்போதும் 7 மாடுகள் மட்டுமே பிடிக்க முடிந்த்து.

இந்த நிலையில் மாடுகளை பிடிப்பவர்கள் தமது பிடி கூலிக்கு இந்த மாடுகளை பிடிப்பது தமது கூலிக்குப் பொருந்தாது என கைவிட்டுச் சென்றனர். இதன் காரணத்தினாலேயே குறித்தபணி தடைப்பட்டது. இருப்பினும் மீண்டும் கடற்படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவற்றினை பிடிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு கால்நடைகளை பிடித்து ஒப்படைக்க ஆவண செய்யப்படும். என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com