சற்று முன்
Home / செய்திகள் / இன, சமய ரீதியான அரசியல் கட்சிகள் பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும்

இன, சமய ரீதியான அரசியல் கட்சிகள் பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும்

இனம் மற்றும் சமயத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை இலங்கையில் பதிவு செய்யக் கூடாது என்ற கோரிக்கை உட்பட 11 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரால் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களிடம் நேற்று முன்தினம் (26) கையளிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இக்குழுவில்​ சு.கட்சி பொதுச் செயலாளர் ஜயாசிறி ஜயசேகர, தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கா, முதலானோரும் இக்குழுவில் கலந்து கொண்டனர்.

ஒருநாட்டில் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் இது வரையப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றவர்களுக்கு இதன் பிரதிகள் கையளிக்கப்பட்ட உள்ளதாகவும் குழுவினர் அங்கு தெரிவித்தனர்.

இதனை சு.கவின் மகஜராகக் கருதாது நாட்டின் தற்போதைய தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட சகல தரப்புக்களையும் கொண்ட பொது மக்களது விருப்பம் இது எனக் கருத வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.இனங்களுக்கிடையேயும், சமயங்களுக்கிடையேயும் சினேகபூர்வத்தை வளர்ப்பதற்கும் பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் அடியோடு துடைத்தெறிய தேவைப்படுவதாகவும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இங்கு மஹிந்த அமரவீர எம்.பி கருத்து தெரிவிக்ைகயில், அமைச்சர் பதவியை கையில் வைத்திருக்கும் போது நாட்டுக்காக சேவை செய்வதும் எதிர்கட்சியில் இருக்கும் போது வெறுமனே இருப்பதும் எமது நாட்டில் ஒரு சம்பிரதாயமாக உள்ளது. ஆனால் கடந்த உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட நிலையை கருத்திற்கொண்டு இதன் பிறகு அப்படியான நிலைமைகள் உருவாகாமல் இருப்பதற்காக சு.க இவ் அறிக்கையை தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு சு.க தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கா எம்.பி கருத்து தெரிவிக்கையில், -நாட்டில் இனத்திற்கு இனம் ஒரு சட்டம் உள்ளதாக நாம் ஒருவருக்கு ஒருவர் விரலை நீட்டாது சகலரும் அதற்கு பொறுப்புக் கூறவேண்டும். இதன் பிறகு நாட்டில் இவ்வாறான நிலைகள் ஏற்படாது பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்கா, பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கா, மேற்பார்வைக்கமிட்டி தலைவர் மலிக் ஜயதிலக, பேராசிரியர் ரோகன லக்ஷ்மன் பியதாச உட்பட பலர் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com