சற்று முன்
Home / செய்திகள் / இந்திய விசுவாசம் – அம்புலன்ஸ் வழங்கும் நிகழ்வில் விழுந்தடித்துப் பங்கேற்ற தமிழ்க் கூட்டமைப்பினர் !!

இந்திய விசுவாசம் – அம்புலன்ஸ் வழங்கும் நிகழ்வில் விழுந்தடித்துப் பங்கேற்ற தமிழ்க் கூட்டமைப்பினர் !!

வடக்கு மாகாண முதலமைச்சர் முதற்கொண்டு முல்லைத்தீவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பின் சாந்தி சிறிஸ்கந்தராஜா வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் அனைவரும் யாழில் பிரதமர் ரணில் பங்குபற்றிய நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.

இந்திய மக்களின் பங்களிப்புடன் இந்திய அரசினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ்களை இலங்கைக்கு வழங்கும் நிகழ்வு இன்று (21) யாழ்ப்பாணம் மாநகர மைதானத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கா இந்தியத் தூதுவர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததோடு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி செய்மதித் தெலைக்காட்சி ஊடாக நேரலையாக நிகழ்வில் இணைந்திருந்தார்.

குறித்த நிகழ்விற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சரவணபவன் உள்ளிட்டோரும் வடக்கு மாகாண முலமைச்சர், வடக்கு அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியாவினால் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படுகின்ற நிகழ்வு என்பதாலேயே தங்கள் இந்திய விசுவாசத்தைக் காட்டிட விழுந்தடித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்ததாக தெரியவருகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com