சற்று முன்
Home / Uncategorized / இந்திய நிதியுதவியில் வவுனியாவில் வைத்தியசாலை

இந்திய நிதியுதவியில் வவுனியாவில் வைத்தியசாலை

வட மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 200 படுக்கை வசதிகளையுடைய வைத்தியசாலை விடுதிக் கட்டடம் ஒன்று அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. 

வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டம் இந்திய அரசாங்கத்தின் முழு நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படுவதாகவும், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது. 

வவுனியா மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுமே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் இரண்டாவது கட்டமாக மருத்துவ உபகரணங்ள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றையும் நோயாளர் விடுதிக் கட்டடத்திற்கு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தையும் இந்தியா பொறுப்பேற்றுள்ளது. 

இதற்கு 100 மில்லியன் இலங்கை ரூபாய்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்!

நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com