சற்று முன்
Home / செய்திகள் / இந்தியன் அம்புலன்ஸ் சேவை நாளை ஆரம்பம்

இந்தியன் அம்புலன்ஸ் சேவை நாளை ஆரம்பம்

வடக்கு மற்றும் ஊவா மாகாணத்திற்கு 1990 இலக்கத்தில் மேற்கொள்ளவுள்ள அவசர நோயாளர் சேவைக்கான 50 நோயாளர் காவு வண்டிகள் நேற்றைய தினம்யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டது.

இந்திய அரசின் நிதி உதவியில் நாளை 21ம் திகதி வடக்கு மற்றும் ஊவா மாகாணத்தில் ஆரம்பிக்கவுள்ள அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்காக தற்போது 50 நோயாளார் காவு வண்டிகள் எடுத்துவரப்பட்டுள்ளது. . இந்த 50 நோயாளர் காவு வண்டிகளும் தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயாளர் காவு வண்டி சேவையின் உத்தியோக பூர்வ கையளிப்பு நாளை இடம்பெறவுள்ளது. இவ்வாறு இரு மாகாணத்திலும் ஆரம்பிக்கும் குறித்த புதிய சேவை ஆரம்ப நிகழ்வில் இலங்கை பிரதமர் நேரடியாக பங்குகொள்ளும் அதேநேரம் இந்தியப் பிரதமர் இணையவழியூடாக உரையாற்றவுள்ளார். இவ்வாறு இரு மாகாணத்திற்கான உததியோகபூர்வ நிகழ்வுகளும் யாழில் இடம்மெறுவதனால் இரு மாகாணங்களிற்கும் கையளிக்கும் வண்டிகள் அனைத்தும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com