சற்று முன்
Home / செய்திகள் / ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி

ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி

ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.

நேற்று (21) பிற்பகல் வியாங்கொட, தல்கஸ்மொட்ட பிரதேசத்திலுள்ள தீஎல்ல ஓயாவில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களான 16, 17 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய குறித்த இருவரும் மீட்கப்பட்டு, வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த இருவரினதும் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வியாங்கொட பொலிசார் தெரிவித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com