சற்று முன்
Home / செய்திகள் / ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் – டிடிவி தினகரன் 29,255 வாக்குகள் பெற்று முன்னிலை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் – டிடிவி தினகரன் 29,255 வாக்குகள் பெற்று முன்னிலை

ஆறாம்சுற்றின் முடிவில்

வேட்பாளர் பெயர் கட்சி மொத்த வாக்குகள்
டிடிவி தினகரன் சுயேச்சை 29255
மதுசூதனன் அதிமுக 15181
மருது கணேஷ் திமுக 7986
கரு நாகராஜன் பாஜக 485
கலைக்கோட்டுதயம் நாம் தமிழர் 1509
நோட்டா 788

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 7வது சுற்று முடிவிலும் 34,346 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். 2வது இடத்தில் உள்ள மதுசூதனனை விட டிடிவி தினகரன் 16,925 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 7 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 7 சுற்றிலும் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார்.

7வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 34,346 வாக்குகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.இரண்டாவது இடத்தில் 17,471 வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் உள்ளார். மதுசூதனனை விட இதுவரை டிடிவி தினகரன் 16,925 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் 9,206 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,509 வாக்குகளுடன் 4வது இடத்தில் உள்ளார். பாஜக 485 வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 925 வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து பாஜக நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெற்று வருகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com