சற்று முன்
Home / செய்திகள் / ஆசிரியர்கள் இடமாற்றக் குழறுபடிகள் – தகவல் தர வடக்கு அதிகாரிகள் பின்னடிப்பு

ஆசிரியர்கள் இடமாற்றக் குழறுபடிகள் – தகவல் தர வடக்கு அதிகாரிகள் பின்னடிப்பு

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் இடமாற்றங்கள் பெரும் குழறுபடிகள் நிறைந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. அதனைச் சீர்செய்வதற்கான பொறிமுறைகள் எதனையும் உருவாக்காமல் மாகாண நிர்வாகம் திணறிவருகின்ற அதே வேளை மத்திய அரசாலும் அதில் தலையிட்டு தீர்த்துவைக்க முடியாத பெரும் துயர நிலை காணப்படுகின்றது.

இதனால் ஆசிரிய ஆளணி தேவைப்படுகின்ற பிரதேசங்களில் ஆளணி இன்றியும் ஆசிரிய ஆளணி தேவைப்படாத இடங்களில் அளவிற்கு மீறிய ஆசிரியர் வளமும் காணப்படுகின்றது. குறிப்பாக புதிதாக நியமனம் பெற்று வெளி மாவட்டங்களுக்கு கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்கள் தமது அரசியல் செல்வாக்கின் மூலம் ஓரிரு மாங்களிலேயே சொந்த மாவட்டங்களுக்கு வருவதும் வெளிமாவட்டங்களில் கற்பித்த ஆசிரியர்கள் ஐந்து வருடம் என்றவுடன் மாற்றம் எடுத்து சொந்த மாவட்டத்திற்கு வருவதுமான நிலை காரணமாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் வளப் பற்றாக்குறை நிலவுகின்றது.

அதேவேளை யாழ் மாவட்டத்தில் பல வலயங்களில் அளவிற்கு மிஞ்சிய ஆசிரியர் வளம் காணப்படுகின்றது. இவ்வாறான குழறுபடிகளால் வடக்கு மாகாணத்தில் கல்வி நிலை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதோடு மாகாண ரீதியில் கடைசி நிலையில் வடக்கு மாகாணம் காணப்படுகின்றது.

இந்நிலையில் இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சிற்கு தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல்களைக் கோரும்வகையில் சில விண்ணப்பங்களை கடந்த நவம்பர் மாத முதல் வாரப்பகுதியில் அனுப்பியபோதும் இக்கட்டுரை எழுதப்படும்வரை குறித்த தகவல்கள் அவர்களிடமிரந்து கிடைக்கவில்ல.

குறித்த தகவல்களை வழங்குமாறு மீள் முறையீடு செய்தபோதும் அவற்றிற்கு பதில் கிடைக்கவில்ல. தரவுகள் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்ற பதிலே கடந்த இரு மாதங்களாக கிடைக்கின்றது. ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் தகவல் அறியும் சட்டம் ஊடாக கோரப்பட்ட விபரங்களை கல்வி அமைச்சு மாகாணத் திணைக்களத்திற்கு அனுப்பிட்டு தமக்கும் அதற்கும் இனி தொடர்பில்லை அவர்களிடம் வாங்குங்கள் என பதிலளித்தது. மாகாண கல்வி அமைச்சு அதனை வடக்கிலுள்ள 12 கல்வி வலயங்களுக்கு அனுப்பிவிட்டு அவற்றிற்கும் தமக்கும் இனித் தொடர்பில்லை விபரங்களை வலங்களில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுங்கள் என பதிலளித்தது.

எனினும் 12 வலயங்களில் நான்கு கல்வி வலயங்கள் எமக்கு பதிலளித்துள்ளன. அவற்றில் ஒரு வலயம் குறித்த தரவுகள் தங்களிடம் இல்லை மாகாணத் திணைக்களத்திடமே கோரிப் பெற்றுக்கொள்ளுங்கள் என பதிலளித்துள்ளது. ஏனைய மூன்று வலயங்களும் எமக்கு பதிலளித்துள்ளன.

ஏனைய 8 வலயங்களும் தகவல் வழங்காது இழுத்தடித்து வருகின்றன.

அவ்வகையில் வடக்கு மாகாணத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களில் நியமனம் பெற்றது முதல் 5 ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஒரே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கிளிநொச்சி கல்வி வலயத்தில் 264 பேர் காணப்படுவதாகவும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பாடசாலையில் கற்பித்த நிலையில் 888 ஆசிரியர்கள் ஒரே வலயத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் கிளிநொச்சி வயலம் தகவலளித்தது.

அதேபோல் துணுக்காய் வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களில் நியமனம் பெற்றது முதல் 5 ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஒரே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் 38 பேர் எனவும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பாடசாலையில் கற்பித்த நிலையில் ஒரு ஆசிரியரும் ஒரே வலயத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் துணுக்காய் கல்வி வயலம் தகவலளித்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com