சற்று முன்
Home / செய்திகள் / அலரி விதை உயிரைக் குடிக்குமா ? உண்டுபார்த்த குடும்பஸ்தர் மரணம்

அலரி விதை உயிரைக் குடிக்குமா ? உண்டுபார்த்த குடும்பஸ்தர் மரணம்

அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதித்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

வலிகாமம் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற குடும்பஸ்தர் , மீண்டும் வீடு திரும்பியதும் வாந்தி எடுத்துள்ளார். அத்துடன் மிகுந்த சேர்வு நிலையிலும் இருந்துள்ளார்.

அது குறித்து அவரது மனைவி விசாரித்த போது , வரும் வழியில் அரலி விதையை உண்டதாகவும் , அதனை சாப்பிட்டால் என்ன நடக்கும் என அறிவதற்காகவே அதனை சாப்பிட்டதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார்.

அதனை அடுத்து அவரது மனைவி அவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இறப்பு தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் ,மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் மேற்கொண்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com