சற்று முன்
Home / செய்திகள் / அரியாலை இளைஞர் கொலை – அதிரடிப்படையினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அரியாலை இளைஞர் கொலை – அதிரடிப்படையினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அரியாலை கிழக்கு மணியந் தோட்டத்தில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை சேர்ந்தவர்களினதும் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம் தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ டிஸ்மன் என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் பண்ணை விஷேட அதிரடிப்படை முகாமினை சேர்ந்த இருவரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினமும் குறித்த வழக்கானது விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி பி.மோகனதாஸ் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக அறிக்கையொன்றை தாக்கல் செய்து குறித்த சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த இரு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரதும் விளக்கமறியலை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடித்து யாழ்.நீதிவான் நீதிமன்றநீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com