சற்று முன்
Home / செய்திகள் / அரசியல் மாற்றம் வட்டுக்கோட்டையிலிருந்து தொடங்கட்டும் – கஜேந்திரகுமார்

அரசியல் மாற்றம் வட்டுக்கோட்டையிலிருந்து தொடங்கட்டும் – கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பிறந்த வட்டுக்கோட்டை மண் அதே உறுதியுடன் தொடர்ந்து தமிழ்த் தேசியத்துக்காகப் பயணிக்கவேண்டும் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தேல்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று சனிக்கிழமை (09) பிற்பகல் 04 மணியளவில் தமிழ்க் காங்கிரசின் வட்டுக்கோடை்டை அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கைகளை கைவிட்டு ஒற்றையாட்சித் தீர்வுக்கு இணங்கியிருக்கின்ற ஒரு தருணத்தில் தாம் உள்ளூராட்சித் தேர்தலைச் சந்தித்திருக்கின்றோம்.
இது வெறும் உள்ளூராட்சித் தேர்தலல்ல. தாங்கள் கஸ்ரப்பட்டு அரசுடன் பேசி கொண்டுவந்திருக்கின்ற அரசியலமைப்புக்கு இது ஒரு கருத்துக் கணிப்பு என சுமந்திரன் பல இடங்களில் கூறியிருக்கின்றார்.  எங்களுக்கு கொள்கைதான் முக்கியம். எங்கள் கொள்கையோடு உடன்படும் தரப்புக்களை இணைத்துச் செயறப்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.
எங்களைப் பொறுத்தவரை இந்த அரசியல் மாற்றம் வட்டுக்கோட்டையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கின்றோம். ஏனெனினல் தமிழ அரசியலின் திருப்புமுனையாக மிக முக்கியமான கட்டங்களில் வட்டுக்கோட்டை இருந்திருக்கிறது. வட்டுக்கோட்டை மக்கள் ஒரு கொள்கையுடன் மிகத் தீவிரமாக இருந்த மக்கள். இந்த மண்ணில்தான் தமிழ்த் தேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பிறந்தது. அந்தக் கோட்பாடுகளை நாங்கள் கைவிட்டுவிடக்கூடாது. எல்லோரையும் விட அந்தக் கோட்பாடுகளை முன்கொண்டுசெல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த மண்ணுக்கே இருக்கிறது. எனவேதான் இந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை இந்த வட்டுக்கோட்டை மண்ணிலிருந்து தொடங்கியிருக்கின்றோம். எனவே இந்த மண் பிழையான தரப்புக்களில் கைகளில் சென்றுவிடக் கூடாது என்பதை கூறிக்கொள்கின்றோம். இந்தத் தேர்தல் பலருடைய கணக்குகளை மீறி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம்” – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com