சற்று முன்
Home / செய்திகள் / “அரசியல் கைதிகளை வைத்து வியாபாரம் செய்யவேண்டாம்” – விடுதலையான கைதி உருக்கம்

“அரசியல் கைதிகளை வைத்து வியாபாரம் செய்யவேண்டாம்” – விடுதலையான கைதி உருக்கம்

தமிழ் தேசியத்தினையும் பல உயிர் தியாகங்களையும் இழிவுபடுத்தி சிங்கள பேரினவாத சக்திகளிடம் தமிழர்களைப் பேரம் பேசி விற்று தங்களின் சுகபோக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டவரான வீரசிங்கம் சுலக்சன் தெரிவித்துள்ளார்.
|
யாழ் ஊடக அமையத்தில் இன்று (22)ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்ட அவர்
அரசியல் கைதிகளுக்கு கூட்டமைப்பினரின் பதில் என்ன ? என்ற தலைப்பில் ஊடக அறிக்கையொன்றினை வெளியீடு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

“தமக்குத் தாமே விழா எடுத்து தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் தமிழக அரசியல் போன்ற ஈனத்தனமான அரசியல் செய்வதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைவிட்டு தமக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் கொஞ்சம் கரிசனை கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

சிறையில் சொல்ல முடியா வலிகளை அனுபவிக்கும் அரசியல் கைதிகள் போன்றோரால் செய்யப்பட்ட இதயம் கனக்கும் தியாகங்களில் தான் உங்கள் பதவி என்னும் நாற்காலி அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தமிழ் தேசியத்தையும் பல உயிர் தியாகங்களையும் இழிவுபடுத்தி சிங்கள பேரினவாத சக்திகளிடம் தமிழர்களைப் பேரம் பேசி விட்டு தங்களின் சுகபோக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் .

சுமந்திரனின் எஜமான் எனக் கருதப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏற்பட்ட பதவி நெருக்கடிக்கும் அண்மையில் கஞ்சா போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்களுக்காகவும் துடித்த சுமந்திரன் சுமந்திரனின் சட்ட புலமை அதிகார வல்லமை தம் அரசியல் கைதிகள் விடயத்திலும் காணப்படுமா?

இன்றுடன் நல்லாட்சி என கூட்டமைப்பினால் கூறப்பட்ட ஆட்சி நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்த கூட்டமைப்பினர் பேசிய பேரம் பெட்டி நிறைய பணமா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறுகள் என இனங்காண முற்படும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எத்தனை பேரிடம் அரசியல் கைதிகள் காணாமல் ஆக்கப்பட்டோர் யுத்தத்தில் கொல்லப்பட்ட டோர் கணவன் அல்லது மனைவி இழந்து அநாதரவான பிள்ளைகள் தொடர்பான தகவல் கோவை உண்டு?

நீங்கள் கூறிய நல்லாட்சி முடியும் முன்னரே எமக்கான தீர்வுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினரே பெற்றுத்தர வேண்டும்.

அதில் முக்கியமானவை,

அரசியல் கைதிகள் விடுதலை
காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதில் வடக்கு கிழக்கு இணைப்பு மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரம்

இவற்றைச் செயல்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச ஊடகங்களை அழைத்தும் ஐநா சபைக்குச் சென்றும் பகிரங்கமாக சர்வதேச சமூகத்திற்கு கூறுவதற்கு கூட்டமைப்பின் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தயாரா?

அல்லது இன்னுமொரு நல்லாட்சி வரும் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்ற போகிறீர்களா” – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com