சற்று முன்
Home / செய்திகள் / அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரைக்கு கை தட்டிய அரச ஊழியர்களுக்கு விசாரணை

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரைக்கு கை தட்டிய அரச ஊழியர்களுக்கு விசாரணை

அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளை ஆதரித்து உரையாற்றியதாக அவருக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு அரசாங்கம் தயாராகிவருகின்ற அரசாங்கம் தனது அமைச்சர் ஒருவர் மீதான ஆத்திரைத்தை அரசாங்க ஊழியர்கள் மீது கொட்டித் தீர்க்க முயன்றுவருகின்றது.

இது தொடர்பில் யாழ் மாவட்ட அரச அதிபருக்கு அரசாங்கத்தினால் பணிக்கப்பட்ட அழுத்தமான உத்தரவு ஒன்றின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அரச உத்தியோகஸ்த்தர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் அது தொடர்பாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் யாழ்.மாவட்ட செயலர் சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஐனாதிபதியின் சேவை 8வது தேசிய நிகழ்சி திட்டம் நேற்று முன்தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பெருமளவான அரச ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஷ்வரன் உரையாற்றும்போதும் இராஜாங்க அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலை புலிகள் குறித்தும் உரையாற்றும்போது அரச ஊழியர்கள் கைதட்டி அவர்களது உரையினை வரவேற்று ஆரவாரம் செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே இன்று (04) யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம் ஒன்று யாழ்.மாவட்ட செயலர் என். வேதநாயகனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த கடித்ததில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் தங்கள் பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் கிராம சேவகர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டமை அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அந்த கடிதத்தில் மேலும் கூற ப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com