சற்று முன்
Home / செய்திகள் / அமைச்சர்கள் பிரச்சனை தீரும்வரை அமர்வுகளை நிரந்தரமாக ஒத்திவையுங்கள் – சபையில் சயந்தன் கோரிக்கை

அமைச்சர்கள் பிரச்சனை தீரும்வரை அமர்வுகளை நிரந்தரமாக ஒத்திவையுங்கள் – சபையில் சயந்தன் கோரிக்கை

வடக்கு மாகாண அமைச்சர்கள் வாரிய பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்வரை சபை அமர்வுகளை நிரந்தரமாக ஒத்திவைக்கவேண்டும் என தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் இன்றைய (26.07.2018) அமர்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், இது தொடர்பில் அவர் உரையாற்றியபோது,

“கடந்த அமர்வில் இச்தச் சபை ஏகமனதான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதில் அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்ட முதலமைச்சருக்கான தத்துவத்தைப் பயன்படுத்தி அதாவது அரசியலமைப்பின் உறுப்புரை 154 எவ் 05 ஐப் பயன்படுத்தி எதுவித காலதாமதமும் இன்றி ஆளுநருக்கான ஆலோசனையை காலதாமதமின்றி வழங்கவேண்டும் என்று இந்தச் சபை ஏகமனதாக தீர்மானித்தது.

அவைத்தலைவரே இந்தத் தீர்மானம் உடனடியாகவே முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் அனுப்பப்படும் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். குறித்த தீர்மானம் அந்த இரண்டு பெரிய ஆழுமைகளுக்கும் அனுப்பப்பட்டனவா? அப்படியாயின் அனுப்பிய அந்தத் தீர்மானத்திற்கு என்ன நடந்தது. அதற்கான பதில் பெற்ப்பட்டதா? அதனடிப்படையில் வடக்கு மாகாணசபைக்கு என்று ஒரு அமைச்சரவை உள்ளதா? அப்படி ஒரு அமைச்சரவை இல்லாவிட்டால் எங்களது நிறைவேற்றுத் தீர்மானங்கள் எந்தவிதத்தில் கொண்டுசெல்லப்படுகின்றன? அமைச்சரவை கூடாது விட்டால் சபைக்கு என்னநடக்கும்? எங்களுடைய அபிவிருத்திப் பணிகளுக்கு என்ன நடக்கும்? சபையினுடைய சட்டவாக்கப் பணிகள் என்ன நடக்கும் ? அந்த அமைச்சர் சபை எனி எப்போது கூடும் ? அப்படியே கூடாமலே அப்படியே டற்ஸ் ஆகிப் போகுமா? என்ற விடயங்கள் ஒரு சாதாரண விடயங்கள் அல்ல. அதனை மறந்து நாங்கள் தொடர்ந்து சபையில் உரையாற்றிக்கொண்டிருக்கப் போகின்றோமா?

அல்லது கௌரவ அவைத்தலைவர் அவர்கள் அமைச்சர் சபையில் எத்தனைபேர் இருக்கிறார்கள்? அமைச்சர் சபை ஒன்று இருக்கிறதா? அது கூட்டப்பட முடியுமா என்ற கேள்விகளுக்கு விடைகண்ட பின்னர்தான் நாம் இந்த சபையை கூட்டுவது என்றும் அத்தகையை முடிவு வரும்வரை இந்த சபையை ஒத்திவைக்கவேண்டும். ஏனெனில் இந்த சபை சட்டவாக்க சபை. இங்கு சட்டவாக்கங்களைச் செய்ய முடியாது இருக்கின்றோம். எமது நிறைவேற்றுச் செயற்பாடுகளைச் செய்வதற்கு அமைச்சர் வாரியம் தேவையாக இருக்கிறது. அதை செய்ய முடியாமல் இருக்கிறது.
இதைத் தவிர்த்து இந்தச் சபை கூட்டப்படுவதற்கு வேறேதேனும் நோக்கம் இருக்கிறதா என்று நான் ஆச்சரியத்துடன் கேட்கிறேன். அப்படி ஒரு காணரம் இருக்கும் என்றால் இப்படியான துப்பாக்கி விவாதங்கள் நடாத்துவதற்காகத்தான் இருக்கும்.

ஆகையினால் அவைத்ததலைவர் அவர்களே அமைச்சர் வாரியப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்வரை எங்களுடைய சட்டவாக்கச் செயற்பாடுகளும் நிறைவேற்றுச் செயற்பாடுகளும் செய்யப்படுவது உறுதிசெய்யப்படும்வரை இந்தச் சபையை நிரந்தரமாக ஒத்திவைக்குமாறு நான் எனக்கு வாக்களித்த மக்கள் சார்பில் இந்தச் சபைக்கு விண்ணப்பம் செய்கின்றேன்” – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com