சற்று முன்
Home / செய்திகள் / அபிவிருத்தி உத்தியோகத்தரின் உயிரைப் பறித்த அரச அதிகாரிகளின் பழிவாங்கல்கள் !

அபிவிருத்தி உத்தியோகத்தரின் உயிரைப் பறித்த அரச அதிகாரிகளின் பழிவாங்கல்கள் !

கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று (20) வியாழக்கிழமை உயிரிழந்த இளைஞன்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குச் சென்று மேலதிக மாவட்டச் செயலரைச் சந்தித்து வெளியில் வந்தபின்னரே அவர் தனது உயிரை மாய்த்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய உயர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவரான தில்லையம்பலம் கஜேந்திரகுமார் (வயது -32) என்ற அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவரது நண்பர்கள் தெரிவித்ததாவது:

கஜன் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் கிடைக்கப்பெற்ற காலம் முதல் பணியாற்றிவருகின்றார். இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால்

இவர் கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக அந்தப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கஜன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் அவர் சில நாட்களாக பணிக்குச் செல்லவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ்ப்பாண மேலதிக மாவட்டச் செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த சில நாட்களுக்கு முன் கஜன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் கஜனது முறைப்பாட்டை பொருட்படுத்தாது, மிகக் கடுமையாக ஏசியதுடன் கஜனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த இடத்திலேயே கஜன் தான் கொண்டு வந்திருந்த நஞ்சை அருந்தி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கஜனின் இழப்புக்கு முற்றுமுழுதாக அதிகாரிகளே காரணம் என கஜனின் பெற்றோர் கருதுகின்றனர் என்றனர்.

இதுதொடர்பில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபரின் பதிலைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும், அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை, தில்லையம்பலம் கஜேந்திரகுமார் போன்று மேலும் பல பட்டதாரிகள் வன்னியில் தொடர்ச்சியாக இடமாற்றம் இன்றி விரக்தியுடன் கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சுவரை கோரிக்கை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com