சற்று முன்
Home / கட்டுரைகள் / அபிவிருத்திற்கான பெண்களின் பங்களிப்பு

அபிவிருத்திற்கான பெண்களின் பங்களிப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி மகளிர் தினத்தில் வெளியிட்ட அறிக்கையில், தேசத்தின் சமூக – பொருளாதார நலனிற்கான பெண்களின் பங்களிப்பைப் பற்றி வலியுறுத்தினார்கள். அறிக்கையின் அடிப்படை செய்தி மிகத் தெளிவாக இருந்தது. அறிக்கைக்கமைய பெண்கள் பொருளாதார அபிவிருத்திற்குள் சம பங்காளர்களென கருதுவதின் முக்கியதத்துவத்தைப் பற்றி அறிவித்திருந்த போது அவர்கள் இலங்கையின் நீண்டக்கால அபிவிருத்தியில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளவர்களாக இருப்பதின் காரணமாக பெண்களை சமமான பங்காளர்களென கருத வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மற்றும் நிலையான அபிவிருத்திக்கான பாதையில் அவர்கள் செல்ல வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் இலங்கையில் பெண்களின் நிலை பற்றிய ஆய்வுகளினால் பெண்கள் பொருளாதாரத்தில் ஈடுபாடுவது மற்றும் அரசியல் அரங்கங்களில் பங்கு பெறுவது குறைந்தளவிலையே காணக்கூடியதாக இருக்கிறது. அது ஒரு எதிர்மறையான விம்பத்தை காட்டுகின்றது என்றே கூறமுடியும்.

தற்போதைய சூழ்நிலையிலையும் கல்வி, இலக்கியம் மற்றும் தாய் ஆரோக்கியம் என்பனவற்றில் தென் ஆசியாவிலையே இலங்கை ஒரு முன்னுதாரணமான நாடாக இருக்கின்றது. அத்துடன் சுகாதாரம் மற்றும் பால் நிலை தொடர்பான இடைவெளிகள் குறைந்தளவில் காணப்படும் நாடாக இலங்கை உள்ளது. ஆன போதும், சமூக-பொருளாதார அபிவிருத்தியின் பங்களிப்பில் பெண்கள் ஒரு கட்டத்திலையே தங்கியுள்ளார்கள் என கூற முடியும். பங்களாதேஸ் நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, அந் நாட்டில் பெண்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து அபிவிருத்தின் பாதையில் நீண்டதூரம் பயணித்திருக்கிறார்கள் என கூறமுடிகின்றது.

அவர்கள் இருந்த கட்டத்திலிருந்தது சற்று உயர் நிலையில் உள்ளனர். ஆனால் இலங்கையில் பெண்கள் நீண்டகாலமாகவே ஒரே இடத்திலையே நிற்கிறார்கள் என்பது நன்கு தெரிகின்றது. குறிப்பாக முன்பு அபிவிருத்திற்கான பெண்களின் பங்களிப்பானது நல்ல நிலையில் காணப்பட்டன. ஆனாலும் தற்போது பெண்கள் தொழில்களில் ஈடுபட்டிருப்பது ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவிலையே உள்ளது (labour force participation). உலக வங்கியின் சமீபகால அறிக்கையின்போது, இலங்கையில் பெண்கள் தொழில்களில் ஈடுபடுவதும், பொருளாதார அபிவிருத்திற்கான அவர்களின் பங்களிப்பானது குறைந்திருக்கின்றது என்பதும் குறிப்பிட்டிருந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையில் நோக்கினால், தொழில்களுக்கான பெண்களின் பங்களிப்பு 36மூ எனவும் ஆண்களின் பங்களிப்பு 73மூ ஆகவும் இருக்கின்றது. குறிப்பிடத்தக்க வகையில், பெண்களுக்கான வேலைவாய்ப்புகளில் விகிதம் உயர்திருந்தாலும், அதில் சில சிக்கல்கள் இருப்பது குறிப்பிட வேண்டும். குறிப்பாக அவர்களின் பங்களிப்புக்கான சம்பளம்(நியாயமான சம்பளம்) கிடைப்பதில்லை என்பது. இலங்கையில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான சம்பளம் இடைவெளியானது அதிகமாக காணக்கூடியதாக உள்ளது. அது பங்களாதேஸ், மாலைதீவு மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடுகலையில் இலங்கை கீழ்மட்டத்தில் உள்ளது.

இலங்கையில் சனத்தொகையில் அதிகளவு பெண்களாக இருந்தாலும் வாழ்வாதாரங்களுக்கான வசதி வாய்ப்புகள் பெண்களுக்கு அரிதாகவே காணப்படுகின்றன. பொருளாதார அபிவிருத்தியில் பங்குபெறுவதற்கு பெண்கள் சவால்களை தினமும் சந்திக்கின்றனர். குடும்ப சுமை என்பது பெண்களின் தலையில் விழுந்திருபதினால் அவர்களுக்கு தொழில்களில் நேரடி ஈடுபாடு வழங்க முடியவில்லை. முக்கியமாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களிலுள்ள பெண்கள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவரை இழந்த பெண்கள், இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த பெண்கள் என பல்வேறு வகையான தரப்பில் பெண்களை குறிப்பிட முடியும்.

இவர்களுக்கான தேவைகள் ஒவ்வொரு திசையில் உள்ளன என்பதும் அறிந்துக்கொள்ள வேண்டும். பெண்கள் குடும்ப பாரத்தை தன் இரண்டு கைகளில் சுமைப்பதினால் இலங்கை அரசு பெண்களுக்கென சில தீர்மானங்கள் எடுத்துள்ளனது. அதில் ஒன்றாக பெண்களுக்கான தொழில் நேரத்தை குறைக்க தீர்மானித்திருப்பது குறிப்பிட முடியும். அத்துடன், இலங்கை முழுவதுமாக டே கெயார் விடுதிகளை அமைக்க தீர்மானித்துள்ளது. அனால் இவை அனைத்தும் பேச்சுவார்த்தைகள் செய்யும் கட்டத்திலையே தங்கியுள்ளன. இவ்வகையான செயற்திட்டங்களை அமுல்படுத்தினாலும், பெண்களுக்கான நீண்டகால செயற்திட்டங்கள் என்னவென்றும், அவர்களுக்கான தேவைகள் என்னவென்றும் மற்றும் நீண்டக்கால அபிவிருத்திற்காக அவர்களின் பங்களிப்பை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெளிவான நோக்கம் அல்லது செயல் முறைகளைக் காணக்கூடியதாக இல்லை. வெறுமனே பெண்களுக்கான உதவிகள், திட்டங்கள் வழங்கினாலும் தூரநோக்கு பார்வை அதில் இல்லை என்பது நன்கு தெரிகின்றது.

இலங்கை வறுமை ஆராய்ச்சி நிலையத்தால் பெண்களின் பொருளாதார ஈடுபாட்டைப் பற்றி பல வகையான ஆய்வுகள் முன்னெடுத்துள்ளன. அதற்கமைய குறிப்பாக வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் மற்றும் அரசு கொள்கைகள் பெண்களை ஊக்குவீக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிட முடியும். ஆனாலும் அது என்தாளவு நடைமுறையில் இருக்கின்றது என்பதை நாங்கள் ஆராய வேண்டும். கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எழுத்துகளில் மட்டும் பெண்களை ஊக்குவிக்கிறதாக இருக்கக் கூடாது. சில தொழில்களைப் பார்க்கும்போது பெண்களை கொள்கைகளில் குறிப்பிட்டிருப்பதும் குறைவென்றே கூறமுடியும். உதாரணமாக கடல் தொழில்களில் பெண்கள் ஈடுபட்டாலும் கடல் தொழில்களுக்கான கொள்கைகளில் பெண்களுக்கான எந்தவொரு விசேட ஏற்படும் வழங்கப்படவில்லை.

கடல் தொழில்களுக்கான கொள்கைகள் ஆண்களுக்கான கொள்கைகளாகவே அமைந்துள்ளன. அத்துடன் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பெண்களை சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் பெண்கள் சட்டத்திற்கு முரணான பாதையில் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பெண்மணிகள் ஏன் செல்கிறார்கள்?, அவர்கள் முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடிகள் என்ன? என்பது கருத்தில்கொள்வது மிக முக்கியமானது. அத்துடன் பெண்களுக்கு விருப்பமான தொழில்களில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதும் முக்கியம். பெண்கள் செய்ய விரும்பும் தொழில்களை கட்டுப்படுத்துவதிற்கு பதிலாக, அவர்களுக்கான நிலையான தொழில்களோ அல்லது வெளிநாடும் செல்லும் பெண்களுக்காக முறையான பாதுகாப்போ வழங்கப்பட வேண்டும்.

இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்களிலிருந்து இன்று வரை பெண்கள் என்றால் யார் என்று நன்கு அறிந்துக்கொள்ள வில்லை. முதலில் பெண் என்றால் யார் என அறிந்துக்கொண்டால் மட்டுமே பெண்களை அபிவிருத்தியில் ஈடுபடவைக்க முடியும். அத்துடன், தொழில்களுக்கான சுதந்திரம், ஊதியம் தொடர்பிலான சமஉரிமை மற்றும் பால்நிலையிலான இடைவெளியைக் குறைப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்துவது மிக முக்கியமென கருதுகிறோம்.

வறுமை ஆராய்ச்சி நிலையம் (CEPA)

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

83 ஜூலை கலவரத்தில் சிக்கிய அபாக்கியசாலிகள் – அனுஷா சிவலிங்கம்

இலங்கையில் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா அரசின் அநீதிப் பட்டியலில் முதல் இடமாக மலையகத்தில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com