சற்று முன்
Home / Tag Archives: jaffna

Tag Archives: jaffna

611 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா தொற்று

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று (ஏப்ரல் 28) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 611ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. 134 பேர் முழுமையாகக் குணமடைந்து ...

Read More »

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆவது நபரும் குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண குணமடைந்துள்ளார். அவர் இன்று யாழ்.போதனா வைத்திய சாலையின் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படுவார் என்று வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். குறித்த நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவருடைய ...

Read More »

யாழில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று – முழங்காவில் முகாமிலிருந்த 4 பேருக்கும் தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது. ...

Read More »

யாழில் இன்று 17 பேருக்கு கொரேனா சோதனை – எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 17 பேருக்கு கோரோனா பயரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கோரோனா சோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கும் கோரேனா நோயாளிகளாக அடையாளங்காணப்பட்ட மானிப்பாய் போதகரின் வீட்டினை சூழவுள்ளவர்கள் 8 பேருக்கும் கொரோனா நோயாளிகளாக அடையாளங்காணப்பட்ட அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர்களது வீட்டின் ...

Read More »

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா – இதுவரை யாழில் தொற்று எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கான ஆய்வுகூடப் ...

Read More »

கொரோனா தொற்றாளியாக எப்படி இனங்காணப்பட்டேன் – மானிப்பாய் மதபோதகர் எஸ். ஆர், ஜோன் உடன் நேர்காணல்

யாழ்ப்பாணம் வந்து சென்ற சுவிஸ் போதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கலந்து கொண்ட ஆராதனையில் பங்கேற்றவர்கள் அவரோடு பழகிய பலரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவரான போதகர் எஸ். ஆர், ஜோன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளார். அவரது விரிவான நேர்காணலினை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். இந் நேர்காணல் குளோபல் செய்திகள் ஊடகத்திற்காக கொழும்பிலிருக்கும் ...

Read More »

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா – தொற்று எண்ணிக்கை 04 ஆக அதிகரித்தது

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் இன்று பிற்பகல் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று ...

Read More »

கோரோனா பரிசோதனைகளை யாழில் மேற்கொள்ள முடிவு

எதிர்வரும் புதன் கிழமை முதல் யாழ்ப்பாத்தில் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட முடியுமென யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் உள்ள பிசிஆர் இயந்திரத்தை இயக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், புதன் கிழமையில் இருந்து யாழில் பரிசோதனைகள் ஆரம்பிக்கலாமென நம்புவதாகவும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு ...

Read More »

யாழில் வீடுகளிற்கு உணவு, மருந்து விநியோகிக்கும் வர்த்தக நிலையங்களின் விபரம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மொத்த விற்பனை செய்யும், வீடுகளிற்கு விநியோகம் செய்யும் வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்களை, யாழ் வணிகர் கழகத்தின் உப தலைவரும், முன்னாள் வடமாகாணசபை தலைவருமான இ.ஜெயசேகரன் வெளியிட்டுள்ளார். குடாநாட்டின் பிறபகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் ...

Read More »

யாரை பாதுகாக்க இந்தச் சதி ??? – யாழில் தமிழ் மக்கள் உயிருடன் விளையாடும் மிகப்பெரும் நாடகம்?

யாழ்.குடாநாட்டு மக்கள் முற்றாக கொரோனோ அச்சத்தில் முடங்கியிருங்க மிகப்பெரும் உண்மையினை மறைக்கும் நாடகம் அரங்கேற தொடங்கியுள்ளது. இதன் பிரகாரம் சுவிஸிலிருந்து வருகை தந்த போதகரிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்திருக்கவில்லையென யாழ்.காவல் நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு சிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு நேரடியாக தொலைபேசி வழி பேட்டியொன்றை இன்று வழங்கியுள்ளார். இதனிடையே இக்காவல்துறை அதிகாரியே வடமாகாண சுகாதார சேவைகள் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com