சற்று முன்
Home / செய்திகள் / யாழில் நடந்த 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள் மோசடி – வங்கிக்குத் தொடர்பில்லை – சூத்திரதாரி கைது

யாழில் நடந்த 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள் மோசடி – வங்கிக்குத் தொடர்பில்லை – சூத்திரதாரி கைது

sri-lanka-money-rupee-notesயாழ்ப்பாணத்தில் திருமண மண்டபம் ஒன்றிற்குக் பணம் கொடுத்தபோது பிடிப்பட்ட 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள்  தொடர்பில் போலி நாணயத் தாள் மோடிசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆனைக்கோட்டை மானிப்பாயைச் சேர்ந்த பெண் ஒருவரைப் பொலிசார்  கைது செய்துள்ளனர்.

திருமணம் ஒன்றின் செலவிற்காக வெளிநாட்லிருந்து அனுப்பப்பட்ட ஒரு தொகைப் பணத்தினைக் களவாடியுள்ள குறித்த பெண் இரண்டு இலட்சம் ருபா பெறுமதியான போலி நாணயங்களைத் தாயாரித்து ஏனைய பணத்துடன் கலந்து கொடுத்தபோதே திருமண மண்டபத்தில் சிக்கிக் கொண்டதாகத் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் (23) காலை ஆனைக்கோட்டை மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்    மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்து வங்கிகளிடமிருந்து 4 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர். பின்னர் அப் பணத்தில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவினை எடுத்துவிட்டு தன்னிடமிருந்த போலி நாணயத் தாள்களை குறித்த பணத்துடன் கலந்து மண்டபத்தில் கொடுத்தபோது அவை சாதாரண தாள்களில் அச்சடிக்கப்பட்டடிருந்தமையால் உடனடியாகவே போலி நாணய மோசடியைக் கண்டுகொண்டவர்கள் பொலிசாருக்கு அறிவித்திருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசன்துறைப் பொலிசார் போலி நாணயத்தாள் மோசடியில் ஈடுபட்டதாகக்கூறப்படும் குறித்த பெண்ணினைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

பொலிசாரின் விசாரணையின்போது நேற்று முன்தினம் (22) அச்சகம் ஒன்றிற்குச் சென்ற குறித்த பெண் தன்னை ஒரு ஆசிரியை என அறிமுகப்படுத்தி பாடசாலையில் நிகழவுள்ள கண்காட்சி ஒன்றின் தேவைக்கு எனக் கூறி பல்வேறு வகையான நாணத் தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகளை பிரிண்ட் செய்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தான் மேற்கொண்ட மோசடியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காகவே வங்கியிலிருந்து பெற்ற பணத்திலேயே போலி நாணயத்தாள்கள் இருந்ததாக கூறியிருந்தமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிசார் கல்வித்தேவைகள் எனக்கூறி நாணயங்களை அச்சுப் பிரதிசெய்ய வருபவர்கள் குறித்து அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும் குறித்த நபர்கள் குறித்து சந்தேகம் ஏற்படின் உடனடியாக தமக்குத் தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com