சற்று முன்
Home / செய்திகள் / #metoo ஆல் சூடான பராதிராஜா ஒருமையில் பேசிவிட்டு எழுந்து சென்றார்

#metoo ஆல் சூடான பராதிராஜா ஒருமையில் பேசிவிட்டு எழுந்து சென்றார்

யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த இயக்குநர் பாரதிராஜாவிடம் கவிஞர் வைரமுத்து சின்மயி தொடர்பான பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரிடம் ஒருமையில் பேசிய அவர் நீ கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று இடைநடுவில் ஊடக சந்திப்பை முறித்துச் சென்றார் .

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (15.10.2018) மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் metoo விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே பாதிராஜா சினமடைந்து வெளியேறினார்.

இயக்குநராக நீங்கள் பெண்களை நடிக்க வைக்கிறீர்கள் நீங்களும் நடிக்கிறீங்கள் அப்படி இருக்கும் போது வைரமுத்து சின்மயி பாலியல் பிரச்சினையை எப்படி பார்க்கிறீங்கள்? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே பாலியல் பிரச்சினையை நீ பார்த்தியா? கேள்விப்பட்டிருக்கிறாய். கேள்விப்பட்டதிற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று பேசிவிட்டு இடைநடுவில் ஊடக சந்திப்பை முறித்துக் கொண்டு எழுந்து சென்றார்.

இதே வேளை பாரதிராஜா ஊடகவியலாளர்களைச் சந்திக்க வரும் முன் நிறைந்த மதுபோதையில் இருந்ததாக அவர் தங்கியிருந்த தங்ககம் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ஊடக சந்திப்பில் ஒருமையில் பேசியதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என பாரதிராஜாவிற்கு எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com