சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 3)

முதன்மைச் செய்திகள்

ஐ.எஸ்.அமைப்புடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு

ஐ.எஸ்.அமைப்பின் கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளுடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரியொருவர் தொடர்பினை பேணிவந்துள்ளார் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையாகியிருந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரியொருவரே இவ்வாறு சாட்சியம் அளித்துள்ளார். குறித்த அதிகாரி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மேலும் கூறியுள்ளதாவது, ...

Read More »

பிரான்ஸில் யாழ்.இளைஞர் கொடூரமான முறையில் கொலை

பாரிஸ்- லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்.இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (43வயது) என்பவரே கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வீட்டு வாடகை தொடர்பில் வீட்டு உரிமையாளருடன் இவருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ...

Read More »

பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விடுமுறையளிக்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளைய தினம் 5ஆம் 11ஆம் தர மாணவர்கள் மற்றும் உயர்தர தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர் என அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான கல்வி ...

Read More »

வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டு மக்களை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியை மலரசெய்வதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்தார். கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிவரும் வேலுகுமாரின் வெற்றியையும் மக்கள் உறுதிப்படுத்த ...

Read More »

நல்லூரானின் திருவிழா நேரலையாக ஒளிபரப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று ஆலய தர்மகர்த்தா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருவிழாவில் Covid – 19 நோய் பரவலை தடுக்கும் உபாயமாக அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்து, முருகப்பெருமானின் கொடியேற்ற ...

Read More »

83 ஜூலை கலவரத்தில் சிக்கிய அபாக்கியசாலிகள் – அனுஷா சிவலிங்கம்

இலங்கையில் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா அரசின் அநீதிப் பட்டியலில் முதல் இடமாக மலையகத்தில் வாழும் மக்கள் மீது நடாத்திய வன்முறைகளையே குறிப்பிட முடியும். வரலாற்றின் வரலாற்றிலிருந்தே ஆரம்பமான இந்த கொடுமைகள் இன்று வரை நீதி கிடைக்காத போராட்டங்களாவே காணப்படுகிறன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த முதல் இனக் கலவரமே மலையகத்திலிருந்து தான் ஆரம்பமானது ...

Read More »

துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் உயிரிழப்பு – 09 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடு வீதியில் வைத்து சுடப்பட்ட ஊடகவியலாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இவரது கொலையுடன் தொடர்புபட்டதாக 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உள்ளுர் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிவரும் விக்ரம் ஜோஷி கடந்த 20 ஆம் திகதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டார். அவரது இரண்டு ...

Read More »

சுகாதார நடைமுறைகளுடன் நல்லூர் கந்தன் மகோற்சவத்திற்கு தயார்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும் என யாழ்.மாநகர சபை பிரதி மேயர் து.ஈசன் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் ...

Read More »

வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் கூறுபவர் நான் அல்ல

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச போன்று தான் வடக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றும் கூறும் தலைவரல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய மக்கள் ...

Read More »

கந்தசஸ்டி கவசம் சர்ச்சை – கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளம் முடக்கம்?

கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த 500இற்கும் மேற்பட்ட காணொளிகள் நீக்கப்பட்டதாக சென்னை சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தளத்தை முடக்க வேண்டும் என யூ-ரியூப் நிறுவனத்திற்கு சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் தளத்தை ஒட்டுமொத்தமாக யூ-ரியூப் நிறுவனம்தான் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com