சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 249)

முதன்மைச் செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனியாக மேதினம் ஊர்வலம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிருளப்பனை மே தின ஊர்வலம் உழைக்கும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறந்த மே தின ஊர்வலம் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கிருளப்பனையில் இடம்பெறும் இந்த ...

Read More »

83 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க ஜனாதிபதி ஒப்புதல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 கைதிகளுக்கு அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த அனுமதி கிட்டியுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார். இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 450க்கும் அதிகமான கைதிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ...

Read More »

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனியார் வசம் !

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக முன்னோக்கி கொண்டு செல்ல பங்குதார நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட, அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் பிரபல வர்த்தகர் அல்லது நிறுவனத்துடன் இணைக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு ...

Read More »

மக்கள் பேரவையின் வரைபு மக்கள் யோசனைகள் குழுவினரிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது தமிழ்த்தலமைகளிடமும், சர்வதேசத்திடமும் கையளிக்கப்படவுள்ள இந்த வேளையில், இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவினரின் இறுதித் திகதி இன்று என தெரிவிக்கப்பட்டதனால், பேரவையின் அரசியல் உபகுழுவினர் இன்று பேரவையின் தீர்வுத்திட்ட இறுதிவரைபை இலங்கை அரசின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் ...

Read More »

நீதிமன்ற விடயங்களில் விளையாட்டு தனமாக செயற்படவேண்டாம் குற்றப்புலனாய்வுப் பொலிசாருக்கு எச்சரிக்கை

நீதிமன்ற விடயங்களில் விளையாட்டு தனமாக செயற்படவோ பொய் கூறவோ வேண்டாம் என குற்றப்புலனாய்வுப் பொலிசாருக்கு கடும் எச்சரிக்கைவிடுத்துள்ள ஊர்காவற்துறை நீதவான் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் விளக்கம் கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை, நீதவான் எம். எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப் பட்டது. அதன் போது வழக்கு ...

Read More »

இவர்களின் தீர்மானத்தை கருத்தில் கொள்ளத் தேவையி்ல்லை – வடக்கு ஆளுநர்

வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஜனநாயக சூழல் பலமடைந்துள்ளதால் ஒவ்வொரு அரசியல் வாதிகளுக்கு தத்தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும்  உரிமை காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் எனினும் இவ்வாறான கருத்துக்கள் தீர்மானங்கள் குறித்து தாம் பெரிதாக ...

Read More »

வடமாகாணசபை பிரிவினைவாதத்தை தூண்டவில்லை – சி.வி.கே

வடமாகாணசபை பிரிவினைவாதத்தை தூண்டவில்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வடக்கு கிழக்குமாகாணங்களில் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களே வாழ்ந்து வருகின்றனர். எனவே வடக்கு கிழக்கை மீள இணைப்பதில் பிரச்சினை கிடையாது.  எனத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்து சமஸ்டி முறைமை அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ள அவர் சமஸ்டி ...

Read More »

தேர்தலிற்கு குட்பை – போட்டியிலிருந்து வைகோ வெளியேற்றம் – பரபரப்பில் மக்கள் நலக் கூட்டணி

சட்டப் பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வைகோ இன்று மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. மதிமுக சார்பில் மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் கோவில்பட்டி தொகுதியில் மனுதாக்கல் செய்தார். ஏன் மனுதாக்கல் செய்யவில்லை ...

Read More »

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பிரகாரம் சுவீடனின் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரம் (Margot Wallstrom) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(24) இலங்கைக்கு வரவுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் , அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நாளைய தினம்(25) உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ...

Read More »

சுதந்திரக் கட்சியை ஒரு பலமான கட்சியாக முன்னெடுத்துச் செல்வேன் – ஜனாதிபதி

எத்தகைய தடைகள், கஷ்டங்கள் வந்த போதும் அவற்றைத் தாங்கிக்கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒரு பலமான கட்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். கட்சியின் தலைமைத்துவத்தை தான் பலவந்தமாகவன்றி எல்லோருடையவும் விருப்பத்துடனேயே பெற்றுக்கொண்டதாகவும், கட்சியில் சீர்திருத்தங்களைச் செய்து அதனை முன்கொண்டு செல்கையில் பல்வேறு தடைகள் முன்வைக்கப்படுவதாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com