சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 20)

முதன்மைச் செய்திகள்

கொரோனாவால் தொழில்வாய்பற்றிருக்கும் தமது கிராம மக்களுக்கு கைகொடுத்த உரும்பிராய் மேற்கு இளைஞர்கள்

சமூக உதவிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் உரும்பிராய் மேற்கு இளைஞர்கள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு சட்டத்தால் தொழில்வாய்ப்பிழந்த குடும்பங்களுக்கு உதவி வருகின்றனர். உரும்பிராய் மேற்கு அன்னங்கையை சேர்ந்த புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் அவர்களது கிராமத்திற்கு வழங்கிய முன்று இலட்சத்து 10 ஆயிரம் ரூபா நிதி உதவியை கொண்டு உரும்பிராய் மேற்கு அன்னங்கை இளைஞர் சனசமூக ...

Read More »

ஓய்வூதியங்களை வீட்டிற்கு சென்று வழங்க தபால் திணைக்களம் நடவடிக்கை

ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைகளம் நடவடிக்கை ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைகளம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:. ஊடக அறிக்கை ...

Read More »

மிருசுவில் கொலையாளி விடுதலை – சிவில் சமூக அமையம் கண்டனம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் இராணுவ சாஜன்ட் சுனில் ரத்னாயக்கா பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமையை தமிழ் சிவில் சமூக அமையம் வன்மையாக கண்டித்துள்ளது. தமிழ் மக்களுக்கான நீதிக்கு ஒரே வழி சர்வதேச குற்றவியல் பொறிமுறைகள் மாத்திரமே என்றும் அமையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப்பேச்சாளர்கள் அருட்பணி வீ. யோகேஸ்வரன், கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ...

Read More »

நடிகர் கமல் தனிமைப்படுத்தப்பட்டாரா ? வீட்டின் முன் ஒட்டப்பட்ட பிரசுரம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனின் இல்லத்தில் கொரோனா தாக்கத்தால் ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்ட சிலமணிநேரத்தில் அகற்றப்பட்டது. நடிகர் கமலின் மகள் சுருதிஹாசன் ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார். தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக சமூகவலைத்தளங்களில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், அவர் வேறு இடத்தில் வசிப்பதாகத் ...

Read More »

பிரதமரைத் தொடர்ந்து பிரித்தானிய சுகாதாரச் செயலருக்கும் கொரோனா தொற்று

Matt Hancock பிரித்தானிய சுகாதார செயலாளர் மெட் ஹென்கொக்ட் இற்கும் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் செயலாளர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சுவிஸ் போதகருடன் தொடர்பு – திருகோணமலை போதகர் குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டது

யாழ்.செம்மணி – பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியதுடன் அவருடைய ஆராதனைகளில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு போதகர் குடும்பத்தினருடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். திருகோணமலை – உப்புவௌி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.போதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ...

Read More »

இந்தியாவில் இன்று நள்ளிரவு தொடக்கம் 21 நாள்களுக்கு ஊரடங்கு

இந்தியாவில் கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு தொடக்கம் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கோரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. அந்த உரையில், “அடுத்த 21 நாள்கள் ...

Read More »

இலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று (மார்ச் 24) செவ்வாய்க்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 102பேர்) அதிகரித்துள்ளது. நாட்டில் கோரோனா ...

Read More »

ஊரடங்கு நேரம் ஓடும் அம்புலன்சில் மகளுக்கு பிரசவம் பார்த்த தந்தை

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் பிரசவ வலியால் துடித்த மகளை உரிய நேரத்தில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முடியாது திணறிய தந்தை தனது மகளுக்கு பிரசவம் பார்த்து நலமாக குழந்தையை பிறக்கவைத்துள்ளார். இந்திய – கேரளாவில் கொரோனா வைரஸ் 56 பேரை தாக்கியுள்ளது. பலர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கேரள மாநிலமே முடங்கியுள்ள நிலையில் நேற்று ...

Read More »

ஊரடங்கில் உணவு வழங்கிய உயர்ந்த உள்ளங்கள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்களது நிலை தொடரும் ஊரடங்கு காரணமாக நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது. அதிலும் யாழிற்கு வெளியிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்களிற்கு இன்றைய ஊரடங்கு மத்தியில் வைத்தியசாலை நிர்வாகம் உணவினை வழங்கிய போதும் அவர்களிற்கு உதவியாளர்களாக நிற்பவர்களது நிலை பரிதாபத்திற்குரியதாகியிருந்தது. நகரிலுள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் ஒரு வேளை உணவுக்காக அவர்கள் திண்டாடியமை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com