சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 10)

முதன்மைச் செய்திகள்

சந்தேக நபரின் மல வாசலில் 4 பக்கட் ஹெரோயின் மீட்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மலவாசலில் இருந்து 4 பக்கெட்டுக்கள் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ...

Read More »

தோற்றாலும் வெற்றிபெற்றாலும் வடக்கின் பிரச்சினைகளை தீர்ப்பேன் – சஜித்

வடக்கில்  பெண் தலைமைத்துவ குடும்பம், நுண்கடன், வேலையாய்ப்பு போன்ற பல்வேறான பிரச்சனைகள் உள்ளன.  நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் வெற்றி  பெறாது போனாலும் இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை பெற்றுகொடுப்பதற்கு முன்னிற்ப்பேன்.என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சஜித் இன்றய தினம் யாழில் ...

Read More »

சாவகச்சேரியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் இன்று சாவகச்சேரி, கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பிரபாகரன் டிலக்சன்

Read More »

காணி மோசடியைத் தடுக்க ‘ஈ – லாண்ட்’ பதிவு

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்தார். காணிப் பதிவின்போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் ...

Read More »

அலுவலக நேரத்தை மாற்றும் பரிந்துரை கையளிப்பு

அரச மற்றும் தனியார் துறையின் அலுவலக நேரங்களைத் திருத்துவது தொடர்பான பரிந்துரைகள் ஆலோசனைக் குழுவால் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச துறையினருக்கு காலை 9 மணி தொடக்கம் மாலை 4.45 மணிவரையும் தனியார் துறையினருக்கும் முற்பகல் 9.45 மணி தொடக்கம் மாலை 6.45 மணிவரையும் வேலை நேரமாக மாற்றியமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் ...

Read More »

கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுப்பது ஆரோக்கியமற்றது

கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுக்கலாம் என நினைப்பது அரசியல் ஆரோக்கியமற்றது. அதனை விடுத்து நாம் என்ன செய்ய போகின்றோம் என மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அரசியலை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான வேதநாயகம் தபேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...

Read More »

தமிழ் மக்களை பிரித்து வாக்குகளை பெற கூட்டமைப்பு முயற்சி

தமிழ் மக்களை சாதி , மத ரீதியாக பிரித்து வாக்குகளை பெற முயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அத்தகைய செயற்பாட்டை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் ...

Read More »

தனியார் வகுப்புகளில் இரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்

தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் முன் வைத்த ஆலோசனைகள் பலவற்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்பித்த தனியார் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 250ஆக மட்டுப்படுத்துவது கடினம் என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர். அதுபற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி, இருவேறுபட்ட ...

Read More »

முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிட வேண்டாம்

சில அரசியல்வாதிகள் தங்களின் விருப்ப எண்களையும் கட்சி சின்னங்களையும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்படும் முக்கவசங்களில் அச்சிடும் நடவடிக்கையை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கண்டித்துள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள குறித்த நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, சுகாதார அவசரகால நடவடிக்கைகளின்போது அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிப்பதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் ...

Read More »

தெற்கைப் பின்பற்றி வடக்கிலும் முகக்கவச பிரச்சாரம்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முகக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நேற்று (28) யாழ்பாணம் மல்லாகம் பகுதியில்  நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் இந்த முகக்கவசங்கள் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தெற்கில் பொதுஜன பெரமுன கட்சியினர் தமது கட்சி இலட்சனை பொறித்த முகக்கவசங்களை விநியோகிக்கும் நிலையில், ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com