சற்று முன்
Home / செய்திகள் / BOC “வங்கியின் பெயரில் போலி நியமனக் கடிதம்” – இளைஞர் யுவதிகள் பலரை ஏமாற்றி யாழில் பல இலட்சம் ரூபா மோசடி

BOC “வங்கியின் பெயரில் போலி நியமனக் கடிதம்” – இளைஞர் யுவதிகள் பலரை ஏமாற்றி யாழில் பல இலட்சம் ரூபா மோசடி

வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறி போலி நியமனக் கடிதங்களை வழங்கி யாழில் கும்பல் ஒன்று இளைஞர், யுவதிகளிடம் இலட்சக்கணக்கான ரூபா பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் வாகீசத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இலங்கை வங்கியில் (BOC) வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறியே குறித்த மோசடிக் கும்பல் ஒவ்வொருவரிடமும் நான்கு இலட்சம், ஐந்து இலட்சம் என பலரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவாயியுள்ளது.

இதில் மோசடிக் கும்பலுடன் தொடர்புபட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் தொடர்பான தகவல்களும் வாகீசத்திற்குக் கிடைத்துள்ளன. வேலை பெற்றுத்தருவதாகக் கூறிய குறித்த சந்தேக நபரிடம் தான் பணத்தினை வழங்கியதாக இளைஞன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கைவங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் இருப்பதாகவும் சுமார் நான்கு முதல் ஐந்து இலட்சம் காசு தந்தால் குறித்த வேலையினைப் பெற்றுத்தருவதாகவும் பண மோசடிக் கும்பல் ஒன்று யாழில் பல இளைஞர் யுவதிகளை அணுகியுள்ளது.

இதில் கமிசன் அடிப்படையில் சில இடைத்தரகர்களையும் குறித்த மோசடிக் கும்பல் ஈடுபடுத்தியுள்ளது.

இளைஞர் யுவதிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உங்கள் கையில் நியமனக் கடிதம் கிடைத்ததும் காசு தந்தால் போதும் முதலில் உங்கள் சுயவிபரக் கோவைகளைத் தாருங்கள் என அவற்றினைப் பெற்றுக்கொண்டுள்ளது குறித்த பண மோசடிக் கும்பல்.

பின்னர் நியமனக் கடிதம் வாங்க கொழும்பிற்கு வருமாறு அழைத்த கும்பல் இது காசு கொடுத்து வாங்கும் வேலை என்பதால் வங்கி தலைமையகத்தில் வைத்து கடிதம் வழங்க முடியாது என்றுகூறி செற்றப் அலுவலகம் ஒன்றில் வைத்து நியமனக் கடிதம் ஒன்றினை வழங்கியபின் பணத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறு ஒரே நாளில் ஒரே நேரத்தில் மட்டும் எட்டுப் பேருக்கு யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை வங்கிகளின் பல்வேறு கிளைகளில் நியமனம் வழங்குவதாகக் கூறி போலி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் நான்கு முதல் ஐந்து இலட்சம் ரூபா பணம் சூறையாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

போலி நியமனக் கடிதம் வழங்கியபோது இது உள்ளால் மேற்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு என்பதால் நியமனக் கடிதத்தை வங்கியில் கொடுத்து பணியில் இணையும்வரை யாருக்கும் தெரியப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி போலி நியமனக் கடிதங்களை உண்மை நியமனங்கள் என நம்பிய குறித்த இளைஞர் யுவதிகள் நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நியமனத் திகதியன்று வங்கி பணியாளருக்குரிய ஆடை அணிந்து வங்கிக்குச் சென்று வங்கி முகாமையாளரிடம் தங்கள் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளார்கள்.

கடிதங்களை வாங்கிப் பார்த்த முகாமையாளர் அவற்றினை போட்டோப் பிரதி செய்து எடுத்துக்கொண்டுவிட்டு இங்கு இவ்வாறு நியமனம் ஏதும் வழக்கப்பட்டிருக்கவில்லை. உங்களை யாரோ ஏமாற்றிவிட்டார்கள் அவர்களைக் கண்டுபிடியுங்கள் என அனுப்பிவைத்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த மோசடிக் கும்பலிடம் ஏமாந்த இளைஞன் ஒருவன் வாகீசத்திற்குத் தெரிவிக்கையில்,

தான் குறித்த கும்பலைச் சேர்ந்த ஒருவரிடம் நான்கு இலட்சம் ரூபா பணத்தினை வழங்கி ஏமாந்ததாகவும் தன்னுடன் சேர்த்து நான்குபேரிற்கு மானிப்பாயிலுள்ள வங்கியில் கொடுத்து பணியில் இணையுமாறு (போலி) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட இளைஞன் ஒருவர் தான் பணம் பெற்றுக்கொண்ட நபரிற்கு மின்னஞ்சல் ஊடாகவே தனது சுயவிபரம் அனுப்பியதாகவும் பின்னர் கொழும்புக்கு அழைத்து நியமனக் கடிதம் வழங்கியபின் தான் பணத்தினைச் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

தான் பணம் வழங்கிய நபர் யாழ்ப்பாணம் மாநகரசபையில் பணியாற்றுபவர் என்றும் அவர் கோப்பாயைச் சேர்ந்தவர் எனவும் கூறியதோடு அவர் தொடர்பான ஆவணங்களை் சிலவற்றை எமக்கு வழங்கினார்.

இதேவேளை ஏனைய சிலர் கண்டியைச் சேர்ந்தவரான யாழ்ப்பாணத்தில் வசித்துவந்த ஒருவரிடம் வங்கி வேலை பெறும் நோக்கில் பணத்தினை வழங்கி ஏமாந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இம் மோசடி குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளிப்படுத்தப்படும்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com