சற்று முன்
Home / செய்திகள் / ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னுமொரு ராஜபக்ஷவை அரியணை ஏற்றாதீர்கள்

ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னுமொரு ராஜபக்ஷவை அரியணை ஏற்றாதீர்கள்

(யாழ் – 16.07.2015) தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றவே முனைகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த இக்கட்டான நிலை தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.கந்தர்மடப்பகுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இந்த முறையும் ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னுமொரு ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு தமிழ் மக்களுடைய வாக்கு பலத்தை பயன்படுத்த கூடாது. அப்படிப்பட்ட ஒரு ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு தேவையில்லை.
உண்மையிலேயே மகிந்த ராஜபச்ஷவின் சித்தாந்தங்களை முற்றுமுழுதாக நிராகரித்து தமிழ் மக்களுக்கு நலன் கொடுக்கக் கூடிய வகையிலே ஒரு புதிய ஆட்சி வரப்போவதென்றால் எங்களுடைய ஆதரவினை முற்றுமுழுதாக் கொடுக்கலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ராஜபக்ஷவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேனவின் தலமையில் இருந்த அந்த கூட்டாட்சி முற்றுமுழுதாக ராஜபக்ஷவை விட தீவிரமாக தமிழ் மக்களுடைய விவகாரங்களில் சிங்கள தேசிய இனத்தின் நலன்கள் என்ற கோணத்தில் அனுகுவார்கள் என்ற வாக்குறுதியினை கொடுத்துத்தான் தென்னிலங்கையில் அந்த தரப்பு செயற்பட்டது.
ஆனால் இன்று கவலை என்னவென்றால் ஆட்சி மாற்றம் பெரிய மாற்றத்தினை கொடுக்கும் என்று நம்பிக்கை கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து, மிகப் பெரிய அளவில் அந்த ஆட்சிமாற்றத்திற்கு தமிழ் மக்களை வாக்களிக்க செய்தும் இன்று ஆட்சியில் இருந்து துரத்தப்பட்ட மகிந்தவையே மைத்திரியின் புதிய ஆட்சி தன்னுடைய மிக முக்கியமான வேட்பாளராகக் கொண்டு வருகின்ற நிலமை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இருக்கினற ஜனாதிபதியின் அதிகாரங்களை மெல்ல மெல்ல குறைத்து அவற்றை பிரதமருக்கு கொடுக்கின்ற போக்கில் போய்கொண்டிருக்கின்ற நிலையிலே பாராளுமன்றத்திற்கு புதிதாக வந்த மகிந்த ராஜபக்ஷ மீண்டும் வந்து ஜனாதிபதியிடம் இருந்து பாராளுமன்றத்திற்கு கொடுக்கின்ற அதிகாரங்களை தான் பயன்படுத்தக் கூடிய நிலமை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிமாற்றம் எவ்வளவு நம்பிக்கை கொடுத்திருக்கின்றது என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.
நாங்கள் உணர்ச்சிவசப்படாமல் வெறுமNனு பழிவாங்கல் என்ற கோணத்தில் சிந்தித்து செயற்படாமல் துரநோகத்தோடு செயற்பட வேண்டும் என்பதால்தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.
இன்றாவது மக்கள் இவற்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் பொறுப்போடுதான் நடந்து கொள்கின்றோம். வெறுமனே மக்கள் ஒரு நிலையில் இருக்கின்றதால் மக்கள்  பழிவாங்க விரும்புகின்றதனால் மக்கள் ஏற்றுக் கொள்ளதாத கருத்தைக் கூறி எங்களை மக்கள் விமர்சிக்கின்ற தேவை எங்களுக்கு இல்லை.
ஆனால் மக்கள் விரும்பாத ஒரு கருத்தை நாங்கள் முன்வைக்கின்றோம் என்றால் அதற்கு ஒரு ஆழமான காரணம் இருக்கின்றது என்பதை மக்கள் உணர தொடங்க வேண்டும்.
எம்மை பொறுத்தவரையில் நாம் தேர்தலுக்கான வாக்குகளை பெறுவதற்கு செயற்படுகின்ற ஒரு தரப்பு இல்லை. மக்கள் நம்பிக்கை வைத்திருந்தால் இனிவரும் காலங்களில் நாங்கள்  அவர்களுக்கு கூறகின்ற ஆலோசனைகளை சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டால் பெரிய அளவில் முன்னேற்றம் அடைய கூடிய நிலமை வரும்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏதிர்காலத்தில் ஏமாற்றப்படக் கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com