சற்று முன்
Home / செய்திகள் / அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக் கழக ஆடி விழாவில் த.தே.மக்கள் முன்னணியினர்

அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக் கழக ஆடி விழாவில் த.தே.மக்கள் முன்னணியினர்

 (யாழ்-19.07.2015) அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக் கழகம் வருடந்தோறும் நடாத்திவரும் ஆடி விழாவின் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் 68 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற  ஆடிவிழாவின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் பிரதம விரந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவினை ஆரம்பித்துத் வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தியதோடு வெற்றிபெற்ற வீரர்களிற்கு பரிசில்களும் வழங்கி கௌரவித்தனர்.
இறுதி நாள் நிகழ்வான இன்று  நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட மென்பந்து துடுப்பாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொக்குவில் காமாட்சி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ஆடிய சங்கானை ஸ்ரார் கிங்ஸ் விளையாட்டுக்கழகம் போட்டியில் வெற்றிபெற்று இவ் ஆண்டுக்கான வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com