சற்று முன்
Home / செய்திகள் / மூளாயில் இன்று மினி சூறாவளியால் வீட்டுக்கு மேல் வீழ்ந்தது பனைமரம்

மூளாயில் இன்று மினி சூறாவளியால் வீட்டுக்கு மேல் வீழ்ந்தது பனைமரம்

 (யாழ்-19.072015) வலி.மேற்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென்று வீசிய மினி சூறாவளியின்போது மூளாய் வேரத்தில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட இந்திய வீடொன்றின் மீது பனை மரம் வீழ்ந்ததில் அந்த வீடு சேதமடைந்தது. ஆனாலும் வீட்டிலிருந்த எட்டு வயதுச் சிறுவனால் வீட்டிலிருந்த அனைவரும் காயங்கள் ஏதுமின்றி காப்பாற்றப்பட்டனர். வைரமுத்து உதயகுமார் என்பவரது வீடே சேதமடைந்தது.

இன்று மாலை 6.30 மணியளவில் திடீரென்று மழைத்தூறல்களுடன் மினி சூறாவளி வீசியது. இதன்போது சேதமடைந்த மேற்படி வீட்டில் கணவன், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். திடீரென வெளியே வந்த இரண்டாவது மகனான எட்டு வயதுச் சிறுவன் அயல் வீட்டில் இருந்த பனை ஆடியதைப் பார்த்து, அப்பா பனை முறியப்போகுது வெளியே வாருங்கள் என்று அழைத்துள்ளான்.
இதைக் கேட்ட தந்தை ஏனைய இரு பிள்ளைகளையும் மனைவியையும் இழுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார். இவர்கள் வெளியே வந்த பின்னர் பனை மரம் வேரோடு சாய்ந்து வீட்டுக்கு மேல் வீழ்ந்தது. வீட்டின் மரங்கள் முறிந்ததுடன் ஓடுகள் கழன்று வீட்டு வாராந்தாவுக்குள் வீழ்ந்தன. பனையில் இருந்த நுங்குகளும் வீட்டுக்குள் வீழ்ந்தன.
இது தொடர்பாக கிராம சேவையாளர், பிரதேச அனர்த்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர், இந்திய வீட்டுத்திட்ட உத்தியோகத்தர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 
(நன்றி – படங்கள் – பிருந்தாபன் பொன்ராசா)

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com