சற்று முன்
Home / செய்திகள் / தேர்தல் சட்டங்களை மீறினால் 7 வருடங்களுக்கு குடியுரிமை ரத்து

தேர்தல் சட்டங்களை மீறினால் 7 வருடங்களுக்கு குடியுரிமை ரத்து

தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும், குற்றங்கள் நிரூபிக்கப்படுமிடத்து அவர்களது குடியுரிமை ரத்துச் செய்யப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்கத்தின் படி, வேட்பாளர்கள் 7 ஆண்டுகள் வரை குடியுரிமையை இழக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றிருந்தால் அந்த உறுப்புரிமையும் ரத்தாகுமென கூறியுள்ளார்.
தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குதல், ஏனைய வரப்பிரசாதங்களை வழங்குதல், அரச நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், இச்சம்பவங்களோடு தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com