சற்று முன்
Home / பிரதான செய்திகள் / தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம் அதிரடி

தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம் அதிரடி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளிற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமை்பிற்கு கிடைக்கின்ற ஆசனங்களில் அரைவாசிக்கு மேற்பட்ட ஆசனங்கள் தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கட்சிகளிற்குக் கிடைக்கும் வகையில் வாக்களிப்பில் புதிய மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார்.
அதன் மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதிவினை எதிர்காலத்தில் சாத்தியமாக்க முடியும் எனவும்  தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக்கட்சிகளது வேட்பாளர்களை விருப்பு வாக்குகளை அளித்து தெரிவு செய்ய முன்வர வேண்டுமெனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் கூட்டமைப்பினை பதிவு செய்வதினில் முட்டுக்கடடை போடுவது தமிழரசுக்கட்சி தான்.கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கான அழுத்ததத்தினை பிரயோகிக்க தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக்கட்சிகளது பலத்தை அதிகரிக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் தமிழரசுக்கட்சி சாராதவர்கள் வெற்றி கொள்ள வைக்கப்படவேண்டும் என்றார் அவர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com