சற்று முன்
Home / பிரதான செய்திகள் / தேர்தல் முடிந்ததும் மௌனம் கலைப்பேன் – வடக்கு முதல்வர்

தேர்தல் முடிந்ததும் மௌனம் கலைப்பேன் – வடக்கு முதல்வர்

(11.08.2015) இலங்கையில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபின்னர் பல்வேறு விடயங்களுகள் தொடர்பில் பதிலளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரன்  தேர்தல் முடியும் வரையில் தான் ஊமையாகவே இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

யாழ் பிரவுண் வீதியில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற பிரம்ம குமாரிகள் மண்டபத்தை திறந்து வைத்த முதலமைச்சரிடம் ஊடகவியியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு முதலமைச்சர் யாருக்கும் எந்தக் கட்சிக்கும் நேரடியாக ஆதரவு தெரிவிக்காத நிலையில் முதலமைச்சரின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றது. இதனால் இத்தேர்தல் முடியும் வரையில் நான் எதனையும் கூற மாட்டேன். தேர்தல் முடியும் வரையில் ஊமையாகவே இருக்க விரும்புகின்றேன். இது முடிந்த பின்னர் நான் பல்வேறு விடயங்களுக்கும் பதிலளிப்பேன் என்றார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com