சற்று முன்
Home / செய்திகள் / ராமேஸ்வரம் அருகே டெங்கு பாதிப்பு ஏராளமானோர் காய்ச்சலால் அவதி

ராமேஸ்வரம் அருகே டெங்கு பாதிப்பு ஏராளமானோர் காய்ச்சலால் அவதி

ராமநாதபுரம் அக் 08,
பாம்பனில் டெங்குகாய்சல் மீனவக்கிரமங்களில் அச்சம் உடனடியாக பாதுகாப்பு  நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுத்துள்ளனர் 
ராமேஸ்வரம் அருகே பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு மீன்பிடி தொழிலாளர்கள அதிக அளவில் வசித்து வரகின்றனர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழைநீர் குடியிருப்புகளை சுற்றி தேங்கி இருந்ததால்அப்பகுதியில் மர்ம காய்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மணிகன்டன என்ற தொழிலாளி வீட்டில் உள்ள நான்கு நபர்களுக்கும் காய்சல் தொடாந்து 20 நாட்களாக நீடித்து வந்துள்ளது அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகயில் சிகிச்சை பெற்று வந்த நிலையில  தனக்கும்  தனது 4 வயது மகன் வேலுபிரபாகரனுக்கு தனியார் மருத்துவமனையில் டெங்கு இருந்தது கன்டுபிடிக்கப்பட்டது; இதனால் தாம் கட்நத 20 நாட்களாக மருந்துகூட வாங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் ஏற்கனவே ரூ 50 ஆயிரத்திற்க்கும் மேலாக வட்டிக்கு வாங்கி தனது குடும்பத்தரை காப்பாற்றியுள்ளதாகவும்  கூறியுள்ளார்
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குநர் பவாணிஉமாதேவி அவர்களிடம் கேட்டபோது பாதிக்கப்பட்ட பகுதிகுறித்து கேட்டறிந்த பின் நாளை மருத்துவகுழுவை அனுப்பிவைப்பதாகவும் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்  
இதனையடுத்து பாம்பன் சுகாதாரஆய்வாலளர் தியாகராஜன்  நம் தொலைபேசி அழைப்பில் வந்து மணிகன்டனுக்கு வைராஸ் காய்சல்மட்டும்தான், அவரின் நான்கு வயது பையனுக்குதான் டெங்கு இருப்பது கன்டுபிடிக்கப்பட்டுள்ளது தகவல் அறிந்து சென்றோம் ஆனால் அவரின் வீடு பூட்டிக்கிடந்ததால் திரும்பி வந்துவிட்டோம் மேலும் புதுத்தெரு மட்டும்மல்லாமல்  பாம்பன், தெற்குவாhடி, சின்னப்பாலம் போன்ற மீனவக்கிரமங்களில் போதிய அளவு பாதுகாப்பு நடவடிக்கையாக மருந்து அடிபபது கொசுக்களை ஒழிப்பதாற்காக புகை அடிப்பது போன்ற நடவடிக்கைகளை தொடாச்சியாக  எடுத்து வருகின்றோம் இருப்பினும் பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் மேலும் தாம் வசிக்கும் இடத்தை தூய்மையாகவும்  ; சுகாதாரமான உணவுகளை உண்டுவந்தாலே இது போன்ற வியாதிகள் வராமல் நம்மைநாமே பாதுகாத்தக் கொள்ளலாம் என்றார் 
மேலும் அப்பகுதி மக்கள் கூறும் போது எப்போதாவது புகை அடிக்க வருகிறார்கள ஆனால் கொசுசாவதே இல்லை புகையடிக்கும் போதே அது நம்மைகடிப்பதை உணரலாம் ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலம் வரும் முன்பே  போதிய பாதுகாப்பு நடவடி;ககை எடுக்க வேண்டுமஎன அரசுக்கு கோரிக்கi விடுத்துள்ளனர் 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com