சற்று முன்
Home / செய்திகள் / நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட மீனவரை மீட்க வலியுறுத்தி 6 வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம் – இன்று மீட்புக்குழு இலங்கை வருகிறது.

நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட மீனவரை மீட்க வலியுறுத்தி 6 வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம் – இன்று மீட்புக்குழு இலங்கை வருகிறது.

ராமநாதபுரம் அக் 08,
நடுக்கடலில் முழ்கடிக்கப்பட்ட மீனவரை மீட்க வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டத்தையடுத்து இன்று மீனவர்கள் குழு இலங்கை வரவுள்ளதாக ராமநாதபுர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 26 ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர் வில்வராஜ் நடுக்கடலில்   இலங்கை கடற்படையினரால் படகுடன் முழ்கடிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள ராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள்  படகுக்கு அடியில் சிக்கிய மீனவரை மீட்டுத்தரவேண்டும் எனக்கோரிக்கைவிடுத்து இன்று (08.10.15) ஆறாவது  நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
13 நாட்களாக கடலுக்கு அடியில் சிக்கிய மீனவரை மீட்பதற்கு நேற்று(07.10.15.) இலங்கை அரசு அனுமதியளித்தது இதனையடுத்து இன்று இரண்டு படகுகளில் மீனவர்கள் குழு நடுக்கடலில் முழ்கிய மீனவரையும் படகையும் மீட்க விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள  ராமசாமி கடலில் முழ்கிய மீனவரின் உறவினர்  
நடுக்கடலில் முழகடிகக்கப்பட்ட மீனவரை தேடிக்கன்டுபிடிப்பதில் அரசு மெத்தனப்போக்கை கடைபடித்தது அதனால் இன்று ஆறாவது நாளாக தொடா் வேலைநிறுத்ப்போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றோம் வில்வராip மீட்டுகரைக்கு கொன்டுவரும்வரை மீன்பிடி தொழிலாளாகள் மீன்பிடிக்கச் செல்லமாட்டார்கள் 
ஏற்கனவே இலங்கைகடற்படையினரின் அச்சுறுத்தலால் மீன்பிடி தொழில் முடங்கியுள்ளது ஆகவே மீனவரை மீடபதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் 26 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றார் 
இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மீனவ மகளீர்  அமைப்பு    தலைவி  இருதயமேரி
 12 நாட்களாகியும் மீனவரை இன்னும் மீட்க வில்லை மீனவர்கள விசயத்தில மத்திய அரசு மெத்தனப்போககை கடைபிடித்துவருகிறது ஆறு நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாததால் மீன்பிடி தொழிலாள்களின் வாழ்ககை மிகவும் நலிவடைந்து போயி உள்ளது ஆகவே அரசு துரித நடவடிக்கை எடுத்து மீனவரை மீட்டுத்தரவேண்டும் மீனவரை மீட்டுத்தரும்வரை நாங்கள் மீன்பிடிக்கச் செல்ல மாட்டேர்ம் என திட்டவட்டமாக மீனவ அமைப்புகள் தெரிவித்தள்ள நிலையில் இன்று இரண்டு விசைபடகுகளில் 12 பேர் கொன்ட மீட்பு குழு  செல்ல உள்ளனர் 
 ஆறாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தப்  போராட்டத்தால் 800 படகுகள் கரையில் நங்கூரமிட்டுள்ளதால் ஜந்து ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும் சுமார் 25 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்;களும் வேலையிழந்துள்ளதோடு  சார்பு நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளதால் 12 கோடி  வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com