சற்று முன்
Home / சினிமா / ரஜினிக்கு நேரெதிர் கருத்து சொன்ன கமல் !

ரஜினிக்கு நேரெதிர் கருத்து சொன்ன கமல் !

(18.10.2015) விறுவிறுப்புடன், எதிர்பார்ப்புகளுடன் நடந்துவருகிறது நடிகர் சங்கத் தேர்தல். கமல்ஹாசன் மற்றும் கெளதமி இருவரும் இன்று காலை 10.30 மணிக்கு வாக்களிக்க வந்தனர். 

வாக்களித்த கமல் ஹாசன் செய்தியாளார்களிடம் பேசினார். இதில் ரஜினி தமிழ் நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றும் படிக் கூற கமல் அதற்கு நேர்மறையான பதிலைக் கூறியுள்ளார். 
அவர் பேசுகையில்,வணக்கம், நம்முடைய முதாதயர்கள் ஒன்றுக் கூடி ஆசையுடன் எழுப்பிய கட்டிடம் தான் தென்னிந்திய நடிகர் சங்கம்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும். இதுவே என் ஆசை. தவறுகளை அவரவர் திருத்திக்கொள்ள வேண்டும். இருக்கின்ற பிரிவு போதும்.  இது ஒரே குடும்பம். ஜாதி, மதம், இனம் என்று எந்த பாகுபாடும் இதில் இருக்கக்கூடாது.  நிச்சயம் நடிகர் சங்கக் கட்டிடம் மீண்டும் கட்டப்படும்.
குடும்பங்கள் தேர்தலுக்குப் பிறகு ஒன்றுக் கூட வேண்டும் என்பதே எனது ஒரே எதிர்பார்ப்பு.எனக் கூறியுள்ளார் கமல் ஹாசன்.
மேலும் இதே பாணியில் ரோஹினியும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது தாய் சங்கம். இதிலிருந்து மற்ற சங்கங்கள் பிரிந்துள்ளன. அதை ஏன் பிரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி அவர் அம்மா மேனகாவின் பதில்!

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com