சற்று முன்
Home / பிரதான செய்திகள் / கனவுகள் மெய்ப்பட வேண்டும்

கனவுகள் மெய்ப்பட வேண்டும்

இருபத்தைந்து வருடமாக சிதைந்து போய்க்கிடந்த கனவுகள் மெல்ல மெல்ல கருக்கட்டத் தொடங்கியிருக்கின்றது.  இது வளலாய் பிரதேசத்தில் மீள் எழுகைக்காய்த் துடிக்கும் 132 வருட பழைமைவாய்ந்த ஒரு பாடசாலை பற்றிய கதை. 
1982 ஆம் ஆண்டு அமெரிக்கன் மிஷனரியால் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வளலாய் கிராமத்தில் அமைந்துள்ளது. கோப்பாய் கல்வி கோட்டத்தில் பழமையான பாடசாலையாகவும் கல்வி செயற்பாடுகளில் சிறந்து விளங்கியதுடன் முதன்மையான பாடசாலையாக 90 ம் ஆண்டுக்கு முற்பகுதியில்; இருந்திருக்கிறது இப் பாடசாலை. ஆரம்ப காலபகுதியில் தரம் ஒன்று தொடக்கம் 11 வரை வகுப்புக்களைக் கொண்டு இயங்கிய பாடசாலை 1960 ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்த பின்னர் தரம் 5 வரை வகுப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டன. 
ஆனாலும் இப் பாடசாலையில் மேல் வகுப்பு ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வளலாயில் இருந்தும் சுற்றுக் கிராமங்களில் இருந்தும்  தொடர்ச்தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டுதான் இருந்தது.
அக்கால பகுதியில் இப்பாடசாலையில் வளலாய் , தம்பாளை ,  அச்சுவேலி ,  பத்தமேனி , மற்றும் தொண்டமனாறு  ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வந்திருக்கிறார்கள். உள்நாட்டு யுத்தம் தீவிரமடைய 1990 ம் ஆண்டு யூன் மாதம் தங்கள் கிராமம் பற்றிய கனவுகளை எல்லாம் நெஞ்சோடு சுமந்து வளலாய் பகுதியில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள்.
 சிறிது காலம் ஆவரங்கால் மகாஜன பாடசாலையுடன் இணைந்து இயங்கிய இப்பாடசாலை  1995ம் ஆண்டு மீண்டும் யுத்தம் தீவிரமடைந்ததை அடுத்து மீண்டும் இடப்பெயர்ந்து சில காலம் இயங்க முடியாமல் போனது.  1996 ம் ஆண்டு யாழ் குடாநாட்டுக்குள் மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வளலாயின் மீள் குடியேற்றமோ கனவாகவே போனது. வளலாய் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை தன்னை மீண்டும் ஆவரங்கால் மகாஜன பாடசாலையுடனேயே இணைக்கவேண்டியதாயிற்று.
2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்திருந்த நிலையில் 2010 ம் ஆண்டு வளலாயில் சில பகுதிகள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்பாடசாலையை மீள ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆவல் பாடசாலை பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு  ஏற்பட்டவே பாடசாலையை மீள ஆரம்பிக்க கோரி ஜனாதிபதி செயலகம் முதல் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கையை முன்வைத்துவிட்டு தங்கள் கனவுப் பாடசாலை நோக்கி பயணமானார்கள்.
புற்றைக@டு சென்று தங்கள் பள்ளியைத் தேடியவர்களிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பாடசாலை இருந்தமைக்கு சாட்சியாய் பழைய தூண்களும் ஒரு பக்க சுவரும் சுவரிலே காணபட்ட கரும்பலகையுமே இருந்தான. பாடசாலை கட்டடம் முற்றாக அழிவடைந்து காணப்பட்டது. எனினும் சோர்ந்து போய்விடாத அவர்கள் வளலாயில் தங்கள் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்காக தொடற்சியாக போராடினார்கள். தொடற்சியான ஐந்து வருடப் போராட்டம் அவர்களைப் பொறுத்தவரை வெற்றியளித்திருக்கிறது. பாடசாலைக்கான சொந்த நிலத்தில் உடனடியாக இயக்க முடியாமல் போய்விட்டாலும் சொந்த இடத்தில் இயங்குவதற்கு அனுமதி கிடைத்திருந்தது.  
21. 04 .2015 ம் ஆண்டு வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா  வளலாய் பொது நோக்கு மண்டபத்தில் வளலாய் மக்களில் கல்விக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கிவைக்க இருபத்தைந்து வருடங்களின்பின் 21 மாணவர்களோடு தனது புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறது வளலாய் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை. இப்பாடசாலைக்கு புதிய அதிபராக க.ரவீந்திரன் நியமிக்கபட்டு உள்ளார்.

அழிவடைந்த பாடசாலை கட்டடத்தை  மீள நிர்மாணிக்க 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக கல்வி செயற்பாடுகள் இடம்பெறவேண்டும் ஆயின் பெற்றோர்கள் , பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மீள ஆரம்பித்துள்ள இப்பாடசாலையில் தமது பிள்ளைகளை இணைக்க முன்வர வேண்டும் என்பதே கிராமத்தவர்கள் பலரது எதிர்பார்ப்பு. 
மிக விரைவில் பாடசாலை கட்டட பணிகள் பூர்த்தி ஆக்கப்பட்டு  மீண்டும் பாடசாலை 25 வருடகால பகுதிக்கு பின்னர் சொந்த இடத்தில் மிக சிறப்பாக இயங்கி கல்வி , விளையாட்டு செயற்பாடுகளில் முன் நின்று வளலாய் பிரதேசத்திற்கு பல சிறப்புக்களை பெற்று தரும் என நம்பிக்கை அப்பகுதி மக்களிடம் காணப்பட்டது

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com