சற்று முன்
Home / சினிமா / ‘வருந்திய இதயங்களுக்கு நன்றி!’- நடிகர் விவேக் ட்விட்டரில் உருக்கம்!

‘வருந்திய இதயங்களுக்கு நன்றி!’- நடிகர் விவேக் ட்விட்டரில் உருக்கம்!

தனது மகனின் மறைவுக்கு வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார், சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் கடந்த வியாழக்கிழமை காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் விருகம்பாக்கம் இளங்கோ நகரில் உள்ள மயானத்தில் நேற்று(வெள்ளி) பிற்பகல் தகனம் செய்யப்பட்டது. 
இந்நிலையில் நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” மீடியா வெளிச்சம் வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, கண்ணியம் காத்த அனைத்து ஊடகங்களுக்கும் என் நன்றிகள். என் மகனின் இழப்பில், எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி! ” என்று  பதிவிட்டுள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி அவர் அம்மா மேனகாவின் பதில்!

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com