சற்று முன்
Home / செய்திகள் / குமார் குணரட்ணம் கைது

குமார் குணரட்ணம் கைது

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரட்ணம் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கேகாலை – அகுருகெல்ல பகுதியில் வைத்து பொலிஸாரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவராக செயற்பட்ட இவர் கடசியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார். 

இதனையடுத்து கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா விசாவில் வந்த அவர் (இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில்) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 

பின்னர் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் எந்த சட்ட சிக்கல்களோ அல்லது தொந்தரவுகளோ இன்றி இலங்கைக்கு வந்து முன்னிலை சோசலிசக் கட்சிக்காக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 

பாரிய சர்சைகளுக்கு பின்னர் நாட்டைவிட்டு வௌியேற்றப்பட்ட அவர், மீண்டும் அந்த அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடனேயே நாட்டுக்குள் வந்து அரசியல் செய்தமை குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை வௌியிட்டனர். 

எதுஎவ்வாறு இருப்பினும் முன்னிலை சோசலிசக் கட்சி அப்போதைய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தினை தன்னை வைத்து நிறைவேற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். 

இதேவேளை தேர்தலின் பின்னர் குமார் குணரட்னம் என்பவர் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டில் தங்கியிருப்பதாக, குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்ட வேளை, அவரை நாட்டில் இருந்து வௌியேற்றக் கூடாது என, முன்னிலை சோசலிசக் கட்சியால் அடிப்படை உரிமை மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

எனினும் அந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் 2015ம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதி அவரை நாட்டில் இருந்து வௌியேற்ற முடியும் என குறிப்பிட்டது. 

இதனையடுத்து தலைமறைவாக இருந்த குமார் குணரட்னம் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதோடு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும் அவர் இலங்கைக்கு வந்த விசா ஜனவரிக்கு பின்னர் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியல்வு திணைக்கள பேச்சாளர் ஒருவர் அத தெரணவிடம் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி அன்றில் இருந்து இன்று வரை குமார் குணரட்னம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தியதன் பின்னர், தனக்கு பிரஜாவுரிமையுள்ள நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அவர் கூறியுள்ளார். 

இதேவேளை குமார் குணரட்னத்தின் விடயம் தொடர்பில் அவுஸ்திரேலியத் தூதரகம் கருத்து கூற மறுத்துவிட்டது. 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com