சற்று முன்
Home / சினிமா / தீபாவளி ஸ்பெசல் – வேதாளம் – ஸ்பீடு விமர்சனம்

தீபாவளி ஸ்பெசல் – வேதாளம் – ஸ்பீடு விமர்சனம்

இதுவரைக்கும் 50 படங்களுக்கு மேல் தல நடிச்சிருந்தாலும், அவரோட கேரியர்ல தீபாவளி அன்னைக்கு ரிலீசாகுற மூன்றாவது படம் வேதாளம்.

இந்த படத்தின் கதையை பற்றி அப்படி இப்படின்னு பலவித பேச்சுக்கள் வந்தது, இது சூப்பர் ஸ்டாரின் அதிசயபிறவி,பாட்சான்னு நிறைய சொன்னாங்க. கல்கத்தாவில் தங்கை லட்சுமி மேனனின் படிப்புக்காக தங்கியிருக்கிறார் அஜித். அவ்வளவு அமைதியான கேரக்டர். ஆனால் லட்சுமி மேனன் அவரது தங்கையில்லை, அஜித்தும் அமைதியான ஆளில்லை, மிகப்பெரிய டான்..இந்த ரெண்டு விஷயங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மைதான் கதை.

வழக்கம்போல் சிறுத்தை சிவா டைரக்‌ஷன் இப்படி இருக்கும், செம ஆக்‌ஷன் அப்படின்னு நினைச்சிட்டு போனா அது இல்லை. ஆனா இது வேற மாதிரி தல படம். செம செண்டிமெண்ட். வரலாறு, முகவரி இப்படி படங்களில் நாம் பார்த்த பாசக்கார தலையை பார்க்கலாம்.

அனிருத் பின்னணி வழக்கம் போல் தெறி மாஸ். ஆனால் பாடல்கள் தான் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அஜித் நின்றால், நடந்தால், பார்த்தால் கூட கைத்தட்டும் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஸ்பெஷல். படத்தின் அஜித் நடிப்பு அதிகம் பேசப்பட வேண்டிய ஒன்று. வாலி படத்திற்கு பிறகு இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பிறகு வேறு மாதிரியான அஜித்தைக் காணலாம். முன்பாதி 40 நிமிடங்கள் மெதுவான நகர்வை பின்பாதி, பரபர வேகத்தில் கடந்து சீட்டில் கட்டிப்போடுகிறது.

ஆனா ஒரு விஷயம் முதல் பாதியில் கதைக்கு வந்து உட்கார ஏன் அவ்வளவு நேரம் எடுத்துகிட்டார் இயக்குநர்ன்னு புரியவே இல்லை. ஸ்ருதி ஹாசன் இருந்தாலும் நிறைய இடங்களில் லட்சுமி மேனன் ஸ்கோர் பண்ணிடுறார். படத்தின் நாயகி ட்ராக்கும், காமெடி ட்ராக்கும் வம்பாக திணிக்கப்பட்டவையாகவே படுகிறது. அஜித்தின் நடிப்பை கொஞ்சம் முழுமையாகவே பயன்படுத்தியிருக்கிறார் சிவா . மொத்தத்தில் தல’யின் ஹார்ட்கோர் ரசிகர்களுக்கு படம் கண்டிப்பாக பிடிக்கும் !

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com