சற்று முன்
Home / Uncategorized / எவன்காட் – விஷேட தகவல்களை வெளியிடும் ஊடக சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது

எவன்காட் – விஷேட தகவல்களை வெளியிடும் ஊடக சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது

எவன்காட் சம்பவம் தொடர்பில் தகவலளிக்க இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அந்த சங்கம் மீண்டும் அறிக்கை வௌியிட்டுள்ளது. 

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் திஸ்ஸங்க சேனாதிபதி தலைமையில் இன்று காலை தலவத்துகொடவில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறும் என நேற்று அந்த சங்கம் அறிவித்தது. 

எதுஎவ்வாறு இருப்பினும் தலைவருக்கு கடந்த மாதம் 21ம் திகதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் 41 நாட்கள் ஓய்வு அவசியம் என வைத்தியர்கள் குறிப்பிட்டதாகவும் இதனால் இன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறாது எனவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் விரைவில் அதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com