சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் – இயல்புநிலை முற்றாக ஸ்தம்பிதம்

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் – இயல்புநிலை முற்றாக ஸ்தம்பிதம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு-கிழக்கில் இன்று (13) மேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தால் போராட்டத்தினால் வடக்கு-கிழக்கு மாகாண மாவட்டங்கள் யாவும் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைய யாழ். மாவட்டத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள், பல்கலைக்கழம் என்பன மூடப்பட்டுள்ளதுடன், யாழ் நகரம் உட்பட யாழ் மாவட்டமே வெறிச்சோடி காணப்படுகின்றது. யாழ் நகரில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதால் மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹர்தாலை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர், விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் மக்களின் அத்தியாவசியமான வைத்தியசாலைச் சேவைகள் வழமைப்போல் இயங்குவதுடன், தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் வெளிமாட்டங்களில் இருந்து யாழ். மாவட்டத்திற்கான போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதோடு கிழக்கு மாகாணத்திலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com