சற்று முன்
Home / பிரதான செய்திகள் / ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் அச்சம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் அச்சம்

ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில்சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. 

இது குறித்து, ஜப்பான்  வானிலையியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மேற்கு கடற்கரையில் உள்ள ககோஷிமா எல்லை மற்றும் சட்சுனான் தீவுகளில் 3 அடி உயரத்திற்கு கடலலை சீற்றத்துடன் காணப்படுவதாகவும், 10 கி.மீ ஆழத்தில் மையமிட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கடற்கரையோரப்பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச்  செல்லுமாறு ஜப்பான் வானிலையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com