சற்று முன்
Home / Uncategorized / வடக்கு அரச பணியாளர்கள் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதி அவசியம்

வடக்கு அரச பணியாளர்கள் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதி அவசியம்

வடமாகாண அரச திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள், பயிற்சி நெறிகள், புலமைப் பரிசில்கள் மற்றும் கற்கைநெறிகளுக்காக வெளிநாடு செல்வதாயின் மாகாண ஆளுநரிடமிருந்து கடமை விடுமுறைக்குரிய அனுமதி பெற்றுக்கொள்வது அவசியம் என வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் திணைக்களத் தலைவர்களுக்கு இன்று (12) தெரிவித்துள்ளார். 

அண்மைக் காலங்களில் அரச அலுவலர்கள் பயணத்தை மேற்கொண்டதன் பின்னர் திணைக்களத் தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களின் பரிந்துரையுடன் கடமை விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் இடைசேர் செலவுக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் என்பன அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

எனவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் அலுவலர்கள் உரிய அனுமதிகளைப் பெற்ற பின்னர் தமது பயணத்தை மேற்கொள்ளும் நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும் காலதாமதமாக அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com