சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் மலையக தமிழர்களின் நலன்களை முழுமையாக உள்வாங்குவதன் மூலம் வரலாற்று ரீதியான அநீதிகளுக்கு முடிவுகட்ட முடியும்

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் மலையக தமிழர்களின் நலன்களை முழுமையாக உள்வாங்குவதன் மூலம் வரலாற்று ரீதியான அநீதிகளுக்கு முடிவுகட்ட முடியும்

dsc03301
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் மலையக தமிழர்களின் நலன்களை முழுமையாக உள்வாங்குவதன் மூலம் வரலாற்று ரீதியான அநீதிகளுக்கு முடிவுகட்ட முடியும் என ஜனநாயகத்திற்கான மலையக அமைப்புகள் தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மலையக மக்களின் இன்றைய நிலைமைகளும் எமது கடமைகளும் என்ற தலைப்பில் ஜனநாயகத்திற்கான மலையக அமைப்புகளின் செயற்குழு கூட்டம் 11.09.2016 அன்று அட்டன் டைன் ரெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் ஜனநாயகத்திற்கான மலையக அமைப்பு என்ற மேற்படி புதிய அமைப்பை உருவாக்கி எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செயற்குழு கூட்டத்தில் குழு அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்தது.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் 11.09.2016 அன்று மலையகத்திற்கான ஜனநாயக அமைப்பு. என்ற அமைப்புக்கு ஒருங்கிணைப்பாளராக எஸ்.விஜேசந்திரன் மற்றும் குழு செயலாளராக பொன்.பிரபாகரன் ஆகியோரை நியமித்தனர்.

இதில் அரசியல் சார்பற்ற நிலையில் முக்கியஸ்தர்களாக திரு.எந்தனி லோறன்ஸ், விசேட அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் முன்னால் செயலாளர் நாயகம் பி.ஏ.காதர் மற்றும் மலையக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த அமைப்பு இவ்வாறு கருத்து தெரிவித்தது,

அதிகாரங்கள் பகிரப்படும் போது மலையக தமிழர்களுக்கு ஏற்புடைய அதிகார பரவலாக்கல் கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் போது மலையக தமிழர்களின் பிரதிநிதித்துவம் 17 ஆக அதிகரிக்கப்படல் வேண்டும். இதனை புதிய தேர்தல் முறைமை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கேற்ப தேர்தல் தொகுதிகள், உருவாக்க வேண்டும்.

மலையக மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, ஆகிய மாவட்டங்களில் தெளிவான தனி உறுப்பினர் தொகுதிகளும் கலப்பு உறுப்பினர் தொகுதிகளும் வடிவமைக்கப்பட்ட வேண்டும்.

விகிதாசார முறைமைக்கான தெரிவு மாவட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். மலையக தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் நியாயபூர்வமாகவும், சமத்துவமான முறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

புதிய யாப்பின் மூலம் நாட்டில் நீடித்த ஜனநாயகம், சமத்துவம் நீதி நிலை நாட்டப்பட வேண்டும். இக்குறிக்கோளை அடைவதற்காகவும், மலையக தமிழ் மக்களுக்கெதிரான வரலாற்று ரீதியான தவறுகளை சீர்திருத்தம் செய்வதற்கும் அவசரமாக முன்வந்து செயலாற்றுமாறு அனைத்து அரசியல், தொழிற்சங்க, சமூக மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் இவ் அமைப்பு இதன்போது வேண்டுகோள் விடுத்தது.vlcsnap-2016-09-11-16h39m32s103

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com