சற்று முன்
Home / Uncategorized / மதிய உணவின் பின் குட்டித் தூங்கம் போடுங்கள்

மதிய உணவின் பின் குட்டித் தூங்கம் போடுங்கள்

தியம் உணவு உண்ட பிறகு, அலுவலகத்தில் தூங்கினால், அவர் வேலைசெய்யத் தவறிவிட்டார் என்றுதானே நினைப்போம். ஆனால், ஜப்பானில் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பகலில் 15 முதல் 20 நிமிடங்கள் தூங்க அனுமதி அளித்துள்ளன. இது அவர்களைப் புத்துணர்வுடன் இருக்கச் செய்வதாக தெரிவிக்கின்றனர்.
உணவு, உடை, வீடுபோல தூக்கமும் அனைவருக்கும் அவசியம். நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வைத் தந்து, ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் தருவது தூக்கம்தான். இரவில் தூங்குவதுபோலவே பகலில் ஒரு குட்டித்தூக்கம் போடுவது இன்று பலருக்கும் வாடிக்கையாக உள்ளது. பகல் தூக்கத்தால் உடல் எடை கூடிவிடும், சோம்பேறித்தனம் அதிகரிக்கும் என்பன போன்ற கருத்துக்கள் நம்மிடையே உலவிவருகின்றன. உண்மையில் பகல் தூக்கம் நல்லதா… கெட்டதா?
பகல் தூக்கம்
பகலில் உறங்கும் குட்டித்தூக்கத்துக்கு `நாப்’ (Nap) என்று பெயர். காலை முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை தரும்போது, 20-30 நிமிடங்கள் உறங்கினால், உடலும் மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகிவிடும்.
அனைவருக்கும் பகல் தூக்கம் தேவையா?
பகல் தூக்கம் என்பது அனைவருக்கும் அவசியமானது அல்ல. இரவில் தேவையான அளவு தூக்கமும் பகலில் வேலை நெருக்கடியும் இல்லாதவர்களுக்கு, பகல் தூக்கம் அவசியம் இல்லாதது. இவர்கள் பகலில் தூங்கினால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இன்னும் சிலருக்கு எவ்வளவுதான் வேலைக் களைப்பு இருந்தாலும், பகலில் தூக்கம் வரவே வராது. இவர்களும் பகல் தூக்கத்தைப் பற்றி கவலைகொள்ள வேண்டியது இல்லை.
யார் தூங்கலாம்?
இரவு முழுவதும் விழித்திருந்து வேலை பார்க்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள், வேலைக்கு முன்னரே ஒரு குட்டித்தூக்கம் போட்டு விழிக்கலாம்.
தொடர்ச்சியாக நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், சிறிது நேர ஓய்வாகத் தூங்கலாம்.
பொதுவாக, நீண்ட தூரம் வாகனம் ஓட்டுபவர்கள் குட்டித்தூக்கம் போடலாம்.
20 நிமிடத் தூக்கம் நம்மை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும். நினைவுத்திறனை அதிகரிப்பதுடன் வேண்டாத விஷயங்களையும் ஞாபகத்தில் இருந்து நீக்க உதவும். சில நாடுகளில் இதுபோன்று பகலில் ஒரு குட்டித்தூக்கம் போடுவது ஒரு வழக்கமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
பகல் தூக்கத்தின் நன்மைகள்
பகலின் குட்டித் தூக்கத்தால் நமது விழிப்புஉணர்வு அதிகரிக்கிறது. மேலும், நமது செயல்திறனில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது.
பகலில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தூங்க வேண்டும். அதீத பகல் தூக்கம், உடலுக்கு நல்லது அல்ல. நேர வரையறை செய்யப்பட்ட குட்டித்தூக்கத்தால் உற்சாகமாகச் செயல்பட முடியும்.
பகல் தூக்கம், புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் தருவதோடு, அந்த நாளின் செயல்திறனையும் அதிகரிக்கிறது.
பகல் தூக்கமானது இருதய நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தூக்கத்தின்போது கவனிக்க வேண்டியவை
குட்டித் தூக்கமானது 30 நிமிடங்களுக்கு மேலே செல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், 30 நிமிடங்களுக்கு மேலான பகல் தூக்கம் சோம்பல் உணர்வைக் கொடுப்பதோடு நமது இரவுத் தூக்கத்தையும் கெடுக்கும்.
தூங்குவதற்கு அமைதியான காற்றோட்டமான இடத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம். மங்கலான ஒளி உள்ள இடமும் உகந்தது.
பகல் தூக்கத்துக்கு சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமான ஒன்று.
வழக்கமாக எந்த நேரத்தில் நீங்கள் உற்சாகம் இழக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com