சற்று முன்
Home / செய்திகள் / தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவுப் பேருரை

தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவுப் பேருரை

3தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின்
89வது பிறந்தநாள்
நினைவுப் பேருரை
யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடம்
27.08.2016 சனிக்கிழமை பி.ப 3.30 மணியளவில்
பிரதம விருந்தினர் உரை
குருர் ப்ரம்மா………………….
தலைவரவர்களே, விசேட அதிதிகளே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, அரசியல் பிரமுகர்களே, அரசியல் தொண்டர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே,
இன்றையதினம் தமிழரசுக்கட்சியின் பழம் பெரும் தலைவர்களில் ஒருவரான திரு.தர்மலிங்கம் அவர்களின் மகனின் தலைமைத்துவத்தின் கீழ் வல்லமைமிக்க அரசியல்வாதியும் தமிழினத்தின் விடிவுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த ஆளுமைமிக்க ஒருதலைவரும் மனிதத்துவத்தை மிகவும் போற்றி கௌரவித்தவருமான காலஞ்சென்ற அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். என்னை இந்நிகழ்வுக்கு அழைத்த அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினருக்கு எனது மனமார்ந்த நன்றி முதற்கண் உரித்தாகுக.
அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்ததினம் நேற்றையதாக இருக்க வேண்டும். ஏனென்றால் ளு.று.சு.னு.பண்டாரநாயக்க ஜே.ஆர்.ஜயவர்த்தன, திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்க, லலித் அதுலத்முதலி மற்றும் அமிர்தலிங்கம், பிரபாகரன் போன்றவர்கள் 8ம் இலக்கத்தில் பிறந்தவர்கள் என்று எனக்கு ஞாபகம். ஆகவே அமரரின் பிறந்த தினம் நேற்றைய தினத்திலேயே இருக்க வேண்டும்.
நினைவுப் பேருரை என்று அழைப்பிதழில் கூறப்பட்டிருக்கின்றது. நினைவுப் பேருரைகள் இருவகைப்படும். இறந்தவர் பற்றியதாக இருக்கும் அல்லது இறந்தவரின் பெயரில் ஏதோ ஒரு சிறப்பு விடயம் பற்றி ஆராய்ந்து பேசுவதாக இருக்கும். என் பேச்சில் அமரர் அமிர்தலிங்கம் பற்றிப் பேசி அவரின் வாழ்விலும் பேச்சுக்களிலும் இருந்து நாம் பெறக்கூடிய படிப்பினைகள் அறிவுரைகள் பற்றி ஆராயலாம் என்று நினைக்கின்றேன்.
நான் ஒருஅரசியல்வாதி அல்ல. எனினும் தமிழரசுக்கட்சியின் பழம் பெரும் தலைவர்களைப் பலசந்தர்ப்பங்களில் கண்டும் கேட்டும் அளவளாவியும் வந்துள்ளேன். நான் முதன்முதலில் அமரர் அமிர்தலிங்கத்தைக் கண்டது நான் கல்விகற்ற கல்லூரியான றோயல் கல்லூரியில் சுமார் 1951ம் ஆண்டளவில். காலஞ் சென்ற பேராசிரியர் கைலாசபதி அவர்கள் அப்போது என் கல்லூரியின் சிரேஷ்ட மாணவர். தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவராக இருந்தார். அச்சங்கம் தமிழரசுக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான காலஞ்சென்ற வைத்தியகலாநிதி நு.ஆ.ஏ.நாகநாதன் அவர்களைத் தமிழில் பேச அழைத்திருந்தார்கள். அவர் ஒரு இளம் வாலிபருடன் கூட்டத்திற்கு வந்திருந்தார். திரு.நாகநாதன் அவர்கள் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டு பேச அழைக்கப்பட்டு எழுந்ததும் ஒரு விசித்திரமான செயலைச் செய்தார். “என்னை அழைத்தமைக்கு நன்றி. ஆனால் எனக்குத் தமிழில் பேசவராது. நாங்கள் ஆங்கிலமொழியிலேயே கல்வி கற்றவர்கள். எனினும் உங்கள் எதிர்பார்ப்பை வீணடிக்கக்கூடாது என்று எம் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவரை உங்கள் முன் தமிழில் பேச அழைத்து வந்துள்ளேன்” என்றார். கனிஷ்ட மாணவர்களான எங்களுக்கு இது வியப்பைத் தந்தது. பேச்சாளரை சங்கத் தலைவர் கைலாசபதி அவர்கள் எமக்கு அறிமுகப்படுத்தி அவரைப் பேச அழைக்க, அவர் ஒரு இளைஞரைத் தன் சார்பில் பேச அழைத்து வந்தமை வழமைக்கு மாறாக அமைந்திருந்தது. சற்றுநேரத்தில் வைத்தியகலாநிதி நாகநாதன் அவர்கள் விடைபெற்றுக்கொண்டு போய் விட்டார். அன்று அங்கு பேசிய இளைஞர்தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். அன்று அவர் எம் மத்தியில் நல்ல தமிழில் பேசியமை எமக்குப் பேருவகை அளித்தது. நாங்களும் ஆங்கிலத்தில் கல்விகற்றவர்களே. எனினும் நல்லதமிழ் கேட்க ஆவலாய் இருந்தவர்கள். கல்கி, கலைமகள் போன்ற தமிழ்சஞ்சிகைகளை மனமுவந்து வாசித்து வந்தவர்கள். அன்று அவர் என்ன பேசினார் என்பது மறந்துவிட்டது. ஆனால் எப்படிப் பேசினார் என்பது நினைவில் இருக்கின்றது. அழகிய இளைஞரான அவர் தனது மேலங்கியின் கைகளை மேலே இழுத்துவைத்துக் கொண்டு உணர்ச்சியுடன் நற்றமிழில் தனது நற்கருத்துக்களை நாவன்மையுடன் நவின்றமை இன்னும் மனதில் பசுமையாக இருக்கின்றது.
அதன்பின் அவரை நான் கண்டது யாழ்ப்பாணத்தில். மானிப்பாயில் வசித்து வந்த என்னுடைய தாய்மாமனார் ஒருவர் தமிழரசுக்கட்சியின் பரமவிசுவாசி. எங்கோ வாகனத்தில் நாங்கள் போய்க் கொண்டிருக்கையில் இன்னொரு வாகனம் எதிர்த் திசையில் இருந்து வந்தது. இரு வாகனங்களும் தெருவில் நின்றன. எதிரில் இருந்த வாகனத்தில் இருந்து திரு.அமிர்தலிங்கம் அவர்களும் எமது வாகனத்தில் இருந்து எனது மாமனாரும் இறங்கிச் சென்று ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து சுகம் விசாரித்துக் கொண்டார்கள். என்னை அறிமுகஞ் செய்துவைத்தார் மாமனார். நான் உடனே அவர் எங்கள் கல்லூரியில் பேசிய பேச்சைப் பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது இன்னமும் றோயல் கல்லூரில் பயின்று வந்த என்னைத் தட்டிக் கொடுத்து உங்களைப் போன்ற இளைஞர்கள் எங்கள் இளைஞர் அமைப்பில் சேரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அன்று அவர் கேட்டவாறு சேரமுடியாவிட்டாலும் இளைஞராக அவர் அணியில் சேர சந்தர்ப்பம் கிடைக்காது விட்டாலும் அவரின் கட்சியும் சேர்ந்து அமைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமார் அறுபது ஆண்டுகளின் பின்னர் வயோதிபராக அங்கம் வகிக்கக் கிடைத்தமை அவர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தில் இணைந்து கொண்டுள்ளதான ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றது.
சட்டக்கல்லூரியில் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் மாணவராக இருந்த காலத்தில் அதாவது 1949ம் ஆண்டில் தந்தை செல்வா அவர்கள் புதிய அரசியற்கட்சி ஒன்றை அமைத்து அதன் முதற்கூட்டத்தைக் கூட்டினார். அதில் கலந்துகொண்ட அமிர்தலிங்கம் அவர்கள் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். அன்று தொடக்கம் அவர் இறக்கும் வரையில் அவர் தனது அரசியல் கடமைகளில் இருந்து ஒதுங்கியிருக்கவில்லை என்று அவரின் நண்பர்கள் கூறுவார்கள். பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் அவர் தமிழர்களின் நலன்களுக்காக உழைக்கப் பின்நிற்கவில்லை.
உதாரணத்திற்கு 1970ம் ஆண்டில் அவர் தேர்தலில் தோல்வியுற்றார். எனினும் அப்பொழுதிருந்து 1977ம் ஆண்டு மறு தேர்தல் வரை அவர் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமாக விளங்கி கட்சியின் வேலைகளைத் திறம்பட ஆற்றினார். பின்னர்; 1972ல் திரு தொண்டமான் அவர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட தமிழர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் ஆகவும் 1976 இல் உருவாக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமாக விளங்கி சகல கட்சி வேலைகளையுந் திறம்பட ஆற்றினார். சிலதருணங்களில் வானத்து நிலவை முகிற் கூட்டங்கள் உருமறையச் செய்துவிடுவன. எனினும் சந்திரனானவன் மறைந்திருந்தாலும் தனது தண்ணொளியைப் பூமியைநோக்கிப் பாய்ச்சியவாறே இருப்பான். அதுபோன்று பாராளுமன்றத்தில் இல்லாதகாலத்திலும் தனது மக்கட் சேவையில் அவர் குறைவைக்காது தனது கடமைகளை ஆற்றிவந்தார்.
1956ம் ஆண்டிலேதான் திரு.அமிர்தலிங்கத்தின் பாராளுமன்ற அரசியல் பிரவேசம் ஆரம்பித்தது. அதன்பின் அடுத்தடுத்து மூன்று தடவைகள் பொதுத் தேர்தல்களில் வெற்றியீட்டினார். தந்தை செல்வாவின் நம்பிக்கைக்குரியவராக அவரின் வலதுகரமாக அவர் செயற்பட்டார். தொடக்கத்தில் இருந்தே தனது வாரிசு அமிர்தலிங்கம் என்பதில் உறுதியாக இருந்தார் தந்தை செல்வா அவர்கள். அவரின் சிறப்பம்சங்களைக் கூறுவதானால் அவர் ஒரு சிறந்தபேச்சாளர் என்பதுடன் மக்கள் பலத்தையும் பெற்றிருந்தார். உடனடியாகத் தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய திறமை பெற்றிருந்தார். அலாதியான ஞாபகசக்தியைப் பெற்றிருந்தார். அஞ்சா நெஞ்சராக சகலதையும் சமாளிக்கும் திறன் படைத்தவராக விளங்கினார். அத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் சாணக்கியத்துடன் எடுத்த மாத்திரத்திலேயே மறுமொழி வழங்கக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தார்.
தந்தைசெல்வா அவர்கள் சுமார் 1965ம் ஆண்டளவில் Pயசமiளெழn நோயினால் பாதிக்கப்பட்டு உரத்துப் பேசக்கூடிய தன்மையை இழந்துவிட்டார். எனினும் அவர் கூறவந்த விடயங்களை அவரின் வாய் அசைவை வைத்தே எடுத்துக் கூறக்கூடிய திறமை பெற்றிருந்தார் திரு.அமிர்தலிங்கம் அவர்கள்.
ஒருமுறை பருத்தித்துறையில் நடைபெற்ற ஒரு கட்சிப் பரப்புரைக் கூட்டத்தில் தந்தைசெல்வா அவர்களின் உரையை எனது மாணவர் திரு.துரைரட்ணம் அவர்கள் எடுத்துக் கூற விழைந்தபோது அவரின் மொழியாக்கம் தந்தை செல்வாவிற்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவே தந்தை செல்வா திரு.துரைரட்ணம் அவர்களைக் கையமர்த்திவிட்டு திரு.அமிர்தலிங்கம் அவர்களை மொழியாக்கம் செய்யப் பணித்தார். அந்தவிதத்தில் கட்சியின் கொள்கை பற்றியும் கட்சித் தலைவரின் கருத்துக்கள் பற்றியும் திரு.அமிர்தலிங்கம் போதிய அறிவும் புரிந்துணர்வும் பெற்றிருந்தார்.
1956ம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராகக் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் தாக்கப்பட்டு தலையில் இரத்தம் சிந்திய நிலையிலும் அவர் பாராளுமன்றம் சென்று அங்கு தமது கருத்துக்களை ஓங்க உரைக்கத் தவறவில்லை.
1961ம் ஆண்டில் நடைபெற்ற நீண்ட சத்தியாக்கிரகத்தின் போது அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் அப்படியிருந்தும் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கைவிடவில்லை. அவ்வாறு தொடர்ந்து நடாத்தியமையினால் திரு.அமிர்தலிங்கம் அவர்களும் ஏனைய தமிழ்த் தலைவர்களுடன் சேர்த்து கைதுசெய்யப்பட்டு 6 மாதங்கள் வரை பனாகொட இராணுவமுகாமில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். எனினும் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் எடுத்த அரசியல் நடவடிக்கைகளில் எந்தவிதத்திலும் பின்நிற்கவில்லை.
திருகோணமலை நகரத்தில் பெரியளவில் இனக்கலவரம் ஏற்பட்டபோது அப்பகுதிக்கு வீதியால் செல்லமுடியாத நிலையில் கடலினூடாக மீன்பிடிவள்ளத்தில் திருகோணமலைத் துறைமுகத்தை அடைந்து அங்குள்ள பதற்றநிலையைத் தணிப்பதற்கு உரியவர்களுடன் பேசி நடவடிக்கைகளை மேற்கொண்டார் திரு.அமிர்தலிங்கம் அவர்கள். தனது கடமைகளில் அவர் பின்னிற்கவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.
ஒருமுறை பாராளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அன்று திரு.அமிர்தலிங்கம் அவர்கள் 5 கூட்டங்களில் பேசுவதாக ஏற்பாடாகியிருந்தது. அதனால் சுதுமலையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் கலந்துகொள்வதாக இருந்திருக்கவில்லை. ஏனைய தலைவர்கள் பலர் கலந்துகொண்டு உரையாற்றியபோதும் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் இன்றி பேச்சுமேடையில் கேள்விகளுக்கான பதில்களை வழங்குவதற்கு அன்றைய கூட்டத்தின் தலைவராக இருந்த வைத்தியர் திரு.அம்பலவாணர் அவர்கள் விரும்பாமையால் முன்கூட்டியே அறிவித்தல் ஒன்றைவிடுத்திருந்தார். “இன்றைய கூட்டம் கட்சியின் பரப்புரைக் கூட்டம். இதில் கேள்விகளுக்கு இடமில்லை” என ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தார்.
கூட்டத்திற்கு வந்திருந்த ஏனைய தலைவர்கள் உரையாற்றிய வரிசையில் எனது நண்பர் சட்டத்தரணி திரு.கரிகாலன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கின்றபோது வட்டுக்கோட்டைத் தொகுதியில் தமது உரையை முடித்துக் கொண்டு இரண்டாவது கூட்டத்திற்குச் செல்லுகின்ற வழியில் சுதுமலைக் கூட்டத்தில் சிலநிமிடங்கள் கலந்துகொள்வதற்காக வந்திருந்தாராம் திரு.அமிர்தலிங்கம் அவர்கள். அவரைக் கண்ட தலைவர் வைத்தியர் அம்பலவாணர் சந்தோஷ மிகுதியில் திரு.கரிகாலன் அவர்களைச் சற்று அமரச் செய்துவிட்டு “கேள்வி கேட்பவர்கள் தற்போது உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்” என அறிவித்தாராம். எடுத்த மாத்திரத்திலேயே மறுமொழி வழங்கக்கூடிய திரு.அமிர்தலிங்கம் அவர்களின் ஆற்றலை வைத்தியர் அம்பலவானர் அவர்கள் அந்த அளவிற்குப் புரிந்துவைத்துக் கொண்டிருந்தார்.
திரு.அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்ற கேள்வி நேரங்களின் போது ஆளுந் தரப்பினதும் பெரும்பான்மைக் கட்சிகளினதும் கேள்விகளுக்கு உடனடியாக சுடச்சுட சரியான பதில்களை வழங்கக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தார். ஒருதடவை இந்திய அமைதிப் படையை இலங்கையைவிட்டு நீக்குவது சம்பந்தமாக வாதப் பிரதிவாதங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது திரு.அமிர்தலிங்கம் அவர்கள் இந்தியப் படையை வெளியேற்றுவதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தாராம். அப்போது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அரசியற் தலைவர்கள் இவரைப் பார்த்து பின்வருமாறு கேட்டார்களாம் –
‘வுhநn லழர னழn’வ றயவெ வழ ளநனெ ழரவ வாந ஐnழெஉநவெ Pநழிடந முடைடiபெ குழசஉந (ஐPமுகு) கசழஅ வாளை உழரவெசல’ என வினவினார்கள். அதற்கு எடுத்தமாத்திரத்திலேயே திரு.அமிர்தலிங்கம் அவர்கள் பதிலிறுத்தார். ‘ஐ னழn’வ றயவெ வழ சநிடயஉந வை டில யn யுடட Pநழிடந முடைடiபெ குழசஉந’ என்று தான் கூறவேண்டிய கருத்தை மிகவும் நாசூக்காகக் கூறிவைத்தார்.
1972ம் ஆண்டின் அரசியல் யாப்பைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னைய அரசியல் யாப்பின் கீழ் தமிழ் மக்களுக்கு ஒரேயொரு பாதுகாப்பாக விளங்கிய 29வது உறுப்புரை 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பால் புறந்தள்ளப்பட்டது. தமிழ்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அரசாங்கம் முன் 6 அம்சக் கோரிக்கையை முன்வைத்தன. அவற்றைப் பரிசீலிக்காமலே நிராகரித்தது அரசாங்கம். பலவிதங்களில் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு வழிவகுத்த 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பை எதிர்த்து 1972ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் தந்தை செல்வா தனது காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பை எதிர்த்து மீண்டும் தான் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அரசாங்கம் யாரை வேண்டுமானாலுந் தன்னுடன் போட்டி போட நியமிக்கலாம் என்றும் தேர்தலில் தான் தோற்றால் தான் அரசியலை விட்டே ஒதுங்கி விடுவதாகவும் தான் வென்றால் அரசியல் யாப்பை மாற்றும்படியும் கோரியே இராஜினமாச் செய்தார். 1975 பெப்ரவரி மாதம் வரையில் தேர்தல் நடைபெறவில்லை. கடைசியில் தேர்தல் நடந்த போது தந்தை செல்வா அமோக வெற்றியீட்டினார். அந்த வெற்றிக்கு வழிகோலியவர் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள். அவரின் இடையற உழைப்பும் ஊக்கமும் தந்தை செல்வாவை அமோக வெற்றியீட்ட வைத்தது.
பல விடயங்கள் அந்த காலகட்டத்தில் மாற்றமடையத் தொடங்கின. கல்வியில் சமன்படுத்தல் இளைஞர்களை விசனம் கொள்ள வைத்திருந்தது. 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பு அதிருப்தியை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. 1975ம் ஆண்டு வரையில் காங்கேசன்துறை இடைத் தேர்தலை நடத்தாதது மக்கள் மனதில் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. 1974ல் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் நடந்த கொலைகள் மக்கள் மனதில் வன் சிந்தனைகளை விதைத்தன. எல்லாம் சேர்ந்து தான் 1976ல் வட்டுக்கோட்டை பிரகடனத்தை கொண்டு வந்தன. எம் மக்களின் அஹிம்சை முறைக்கு மாற்றாக அரசாங்கம் வன்முறையையே நாடியது.
1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழீழக் கோரிக்கையை முன்வைப்பதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அத்தீர்மானத்தை அச்சேற்றி யாழ் பஸ் நிலையத்தில் துண்டுப் பிரசுரமாக விநியோகித்த போது அதனை விநியோகித்த குற்றத்திற்காக திரு.அமிர்தலிங்கம் உட்பட 04 அரசியற் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வுசயைட-யவ-டீயச நீதிமன்ற முறை மூலம் வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஞ.ஊ க்களும் சிரே~;ட சட்டத்தரணிகளும், எல்லாமாக 77 பேர் வரை மன்றில் தோன்றி அவசரகாலச் சட்டத்தின் சட்ட வரையறை பற்றி திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் ஞ.ஊ.அவர்களும் தமிழர்களின் இறைமை பற்றி திரு.எம். திருச்செல்வம் ஞ.ஊ.அவர்களும் சிறப்பாக வாதிட்டு இறுதியில் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
1977 ஏப்ரில் மாதத்தில் தந்தை செல்வா இறைவனடி சேர்ந்தார். அதே வருடம் ஐ{லை மாதத்தில் பொதுத் தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. திரு அமிர்தலிங்கம் ஐ{லை 1977ல் எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கப்பட்டார்.
திரு அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய காலத்தில் அவர் தமிழர்களுக்கு மட்டும் தலைவராக இருக்கவில்லை தேசியப் பிரச்சனைகளிலும் தனது கவனத்தை செலுத்தியது மட்டுமல்லாது அவ்வப்போது அரசினை நேர்வழியில் கொண்டுசெல்லக்கூடிய ஒரு தலைவராகவும் விளங்கினார். அவரின் தலைமைத்துவப் பண்பு பற்றி பேசுவதானால் உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறலாம். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒரு மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தது மட்டுமன்றி கட்டடக் கூரைகளில் ஏறியிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட போது பல தலைவர்கள் சென்று பேசியும் அந்த உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. ஆனால் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் நேரடியாகச் சென்று ஏணி மூலமாக கூரையில் ஏறி அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார்.
அவரின் காலத்திலேயே கொழும்புப் பாராளுமன்றம் கொழும்புக் கோட்டையில் இருந்து ஸ்ரீஜெயவர்த்தனபுரவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போது பலர் இவரை ஸ்ரீஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டாம் என தடுத்த போதும் அவர் அது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனக் கருதி அதில் கலந்துகொண்டு அங்கே உரையாற்றும் போது தமிழர்களின் தனித்துவம் பற்றியும், நல்லூர் இராஜதானி பற்றியும் உரையாற்றி பதிவுகளை உறுதி செய்து கொண்டார்;.
எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை அதாவது திரு.அமிர்தலிங்கம் அவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ‘திரு அமிர்தலிங்கம் அவர்களை கமுகில் கட்டி இரண்டாகக் கிழிக்க வேண்டும்” என ஆளுந்தரப்பினர் கூச்சலிட்டனர். அவ்வளவு கூச்சலுக்கு நடுவிலும் யாருக்கும் அஞ்சாது துணிந்து ஒரு நீண்ட உரையாற்றி அவர்களின் குற்றச்சாட்டுக்குப் பதிலிறுத்தார் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள்.
இது வரை அமரர் அமிர்தலிங்கம் வாழ்க்கையில் ஆங்காங்கே நடைபெற்ற சில சம்பவங்கள், நிகழ்வுகள் பற்றியும் அவற்றின் ஊடாக அவரின் குணாதிசயங்களை வெளிக் கொண்டு வரும் விதத்திலும் கூறி வந்தேன்.
இனித் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டங்கள் பற்றியும் அதில் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பங்களிப்பு பற்றியும் ஆராய்வோம்.
1949ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ந் திகதியன்றே இலங்கைத் தமிழரசுக் கட்சி உதயமாகியது. அதன் முக்கிய குறிக்கோளாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மொழிவாரியாகத் தன்னாட்சி உரிமை பெற்ற சமஷ்டி அலகாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. பல தடவைகளில் அரசாங்கத்திற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் உடன்பாடுகள் தயாரிக்கப்பட்டு, கைச்சாத்தும் இட்ட பின்னர் கிழித்து வீசப்பட்டன.
இதனால் சம~;டி அமைப்பின் கீழ் தன்னாட்சி என்ற கோரிக்கைக்குப் பதிலாக வெளிநாட்டவர் இலங்கைக்கு வர முன்னர் தமிழ் மக்களுக்கிருந்த சுதந்திர நாடு மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது. அதுவே ஆயுதமேந்தியவர்களின் குரலாகவும் ஒலித்தது.
இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாம் மீண்டும் சம~;டி அமைப்பின் கீழ் தன்னாட்சி கோரிக்கைக்கே தள்ளப்பட்டுவிட்டோம். எனினும் இன்றைய கள நிலை மிகவும் மோசமடைந்து வருகின்றது என்பதை எமது மக்கள் முற்றாக உணர்ந்துள்ளார்களோ நான் அறியேன்.
சில உதாரணங்களைக் கூறுகின்றேன். போர் முடிந்து ஏழு வருடங்களுக்குப் பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினருக்கும், கடற்படையினருக்கும், ஆகாயப் படையினருக்கும் இங்கு என்ன வேலை? முன்னர் காலத்திற்குக் காலம் மட்டும் தெற்கில் இருந்து எமது இடங்களில் மீன்பிடிக்கத் தற்காலிகமாக இடம்பெயர்ந்து வந்த தென்பகுதி மக்கள் இன்று நிரந்தர வதிவிடங்களை இராணுவத்தினர் உதவியுடன் முல்லைத்தீவுக் கடற்கரைகளில் அமைப்பதன் சூட்சுமம் என்ன? பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் எமது கனிய வளங்கள் தெற்கில் இருந்து வருபவர்களால் சூறையாடப்பட்டுச் செல்வது எமது மக்களுக்கு புரியவில்லையா? எமது காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பழழபடந மூலமாய்ப் பார்த்தால் ஆழ்ந்த வனப் பிரதேசங்களின் மத்தியில் மரங்கள் பல வெட்டப்பட்டு காடுகள் அற்ற நிலையில் பல இடங்கள் மொட்டையாகக் காட்சி அளிக்கின்றன. இதன் மர்மம் என்ன? நாம் எமது இராணுவ முகாம்களை மூடிக் கொண்டு வருகின்றோம் என்று அரசாங்கம் கூற அமெரிக்க நிறுவனம் ஒன்று படமெடுத்து 2009ன் பின்னர் 2014 வரையான காலப் பகுதியில் இராணுவ முகாம்களின் எல்லைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன, கூடிய காணிகள் கையேற்கப்பட்டுள்ளன என்று தெரிவிப்பதன் தாற்பரியம் என்ன? நேற்றைய தினம் வடமாகாண இராணுவத்தளபதியால் பலாலிக் காணிகள் கைவிடப்படமாட்டா மாறாக கையேற்கப்படுவன என்று கூறியதன் அர்த்தம் என்ன? காணாமல்போனோர், சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக வாடுவோர், விடுவிக்கப்பட்டும் உடல் உளப் பாதிப்புக்களுக்கு உள்ளானோர், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக நடமாடும் எமது மக்கள், எமது இளம் விதவைகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், தாய் தந்தையர் அற்ற அநாதைக் குழந்தைகள், பாலியல் பாதிப்புக்களுக்கும் போதைப் பொருட் பாவனைக்கும் உள்ளாகி வரும் எமது இன்றைய சமூதாயம் – இவ்வாறு எமது சமுதாயம் சின்னாபின்னப்பட்டு சிதைந்து வாழ்ந்து வரும் சூழல் எதனை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது? அதைவிட நாட்டின் எந்த இடத்திலும் பௌத்த விகாரைகளைக் கட்டலாம் சிங்கள மக்களைக் குடியேற்றலாம் என்று கூறும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளோரின் கூற்றுக்கள் எதனை எடுத்துக் காட்டுகின்றன? எமது இன்றைய இளைய சமுதாயம் எவ்வாறாயினும் வெளிநாடுகளில் சென்று குடியேற வேண்டும் என்ற வெறியில் வாழ்ந்து வரும் பாங்கு எதனை வெளிப்படுத்துகின்றது? கொழும்பில் அனுமதி பெற்று எமக்குத் தெரியாமல் சுற்றுலா மையங்கள் எமது பாரம்பரிய இடங்களில் வெளியார்களால் அமைக்கப்பட்டு வருவது எதைக் காட்டுகின்றது?
என் கணிப்பின் படி நாங்கள் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு வருகின்றோம். எவ்வாறு சுனாமியின் போது பாரிய கடல் அலைகள் எம் இடங்களையும், மக்களையும் அவர்தம் ஆதனங்களையும் கபளீகரம் செய்தனவோ அதையொத்த விதத்தில் எமது பாரம்பரிய நிலங்கள் பறிபோகின்றன. பல நூற்றாண்டு கால வாழ்க்கை முறை சிதைவடைந்து வருகின்றது. ஒரு பக்கத்தால் சமாதானம் பேச மறுபக்கத்தில் சதிவேலைகள் நடந்து வருவதை நாம்; சுட்டிக்காட்டினால் எமக்குத் தீவிரவாதிகள் பட்டம் சூட்டுகின்றனர்;. எம்முடைய மக்களே எமக்கு இப்பேர்ப்பட்ட பட்டங்களைச் சூட்டுகின்றார்கள்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்த ஒரு இளம் பெண் சடுதியாக அறிமுகமான ஒரு ஆண் எங்கோ செல்லத் தன்னை அழைக்கின்றான் என்றால் அவனை ஏதோ ஒரு சபல புத்தி ஆட்கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வாள். அறுபது வருடங்களுக்கு மேலாக எமக்கு எந்தவித நன்மைகளையுந் தந்துதவாத அரசாங்கம் தற்பொழுது முண்டியடித்துக் கொண்டு முதலீடுகளைச் செய்யவும் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவும் முன்வந்தால் அவற்றின் அடிப்படைக் காரணங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தருவனவற்றை வேண்டாம் என்று நான் கூற வரவில்லை. தந்துவிட்டு அவர்கள் எம்மிடம் இருந்து எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படியான சூழலை எம்மைச் சுற்றி ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள் என்பதை அறியப்பார்க்க வேண்;டும். முதலீடுகள் வந்தால் பிரச்சனைகள் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று எண்ணுவாரும் உளர் எம்மத்தியில். அவ்வாறான சிந்தனைகள் சரிதானா என்று எமது புத்தி ஜீவிகள் ஆய்ந்துரைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இவற்றிற்கும் அமரர் அமிர்தலிங்கத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். 13வது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வரப்பாடுபட்டவர் அமரர் அமிர்தலிங்கம். அவரின் அயராத உழைப்பே பிரதமர் இந்திராகாந்தியை எம் சார்பில் செயற்பட வைத்து அவரின் விசேட தூதுவராக திரு. பார்த்தசாரதி அவர்களை அனுப்ப வழிகோலியது. எனினும் இலங்கை அரசாங்கம் வாக்குத்தந்தவாறு சட்ட ஏற்பாடுகளை ஆக்கவில்லை.
13வது திருத்தச்சட்டம் பற்றிய குறைபாடுகளை 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ந் திகதி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள், காலஞ்சென்ற சிவசிதம்பரம் அவர்கள், தற்பொழுது எம்முடைய தலைவராகப் பணியாற்றும் திரு.சம்பந்தன் அவர்களுடன் சேர்ந்து இரஜீவ்காந்திக்குக் கடிதம் அனுப்பிய போது எமக்கு நடக்கக் கூடிய அவலங்களை உணர்ந்தே மேற்படி கடிதத்தை எழுதினார்கள்.
அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு எம் விடயங்களை நாங்களே பார்த்து தீர்வு காண எமக்கு இடம் அளிக்காவிட்டால் எமது வருங்காலம் இருள் நிறைந்ததாக இருக்கும் என்பதைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்துக் கூறியவர் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள்;.
13வது திருத்தச்சட்ட ஏற்பாடுகள் தமிழ் மக்கட் பிரதிநிதிகள் முன் வைக்கப்பட்ட போது அவை எமது எதிர்பார்ப்புக்களுக்கு முரணானதாக அமைந்திருந்ததை அமரரும் மற்றையோரும் அந்தக் கடிதத்தால் எடுத்துக் காட்டினார்கள். இந்தியாவிற்குத் தெரிவித்தே தமிழர்களின் தீர்வு பற்றிய சட்ட வரைவுகள் முற்கொண்டு வருவோம் என்ற இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டமை அக்கடிதத்தில் எடுத்துக் காட்டப்பட்டது.
வடகிழக்கு இணைப்பை ஏற்படுத்திய விதம் பற்றி அவர்கள் குறைபட்டார்கள். ஈற்றில் வடகிழக்கு இணைப்பு நிரந்தரமாக இடம்பெறாமல் போகும் என்றார்கள். அது நடந்தது. சட்டவாக்க அதிகாரம், நிறைவேற்று அதிகாரம் ஆகியன இந்தியப் பிராந்தியங்;களின் அதிகாரங்களை ஒத்திருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் அவை இலங்கை அரசாங்கத்தால் இந்தியாவின் முன் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் 13வது திருத்தச்சட்ட வரைவைக் கொண்டு வரும் போது அவற்றை அகற்றிவிட்டார்கள். இதனால் மாகாணசபையைத் திறம்பட நடத்த முடியாத சூழலை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திவிட்டது. ஆளுநர் வெறும் சம்பிரதாயபூர்வ அதிகாரியாக இருக்கவேண்டும் என்று பேச்சுக்களின் போது ஒத்துக் கொண்டார்கள். ஆனால் அவரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு ஸ்தரப்படுத்தப்பட்டன.
இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய வேலைகளை அரசாங்கத்தால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டவர் தானே செய்ய முன்வந்துள்ளார். புதன்கிழமைகளில் மக்களைக் காண்கின்றார். எமது திணைக்களங்களுக்கு ஆணைகள் இடப்படுகின்றன. பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களில் பௌத்த கோயில்கள் கட்ட உரித்துண்டு என்கிறார்கள். தெற்கிலிருந்து முதலீடுகளைப் பெருவாரியாக வடக்கிற்குக் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள்.
அன்று ஆளுநரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால் இவையெல்லாம் நடந்திருக்காது. இவ்வாறு நடைபெறப் போகின்றது என்று கண்டு இரஜீவ்காந்திக்கு அவசர கடிதம் எழுதியவர்கள் அமரர் அமிர்தலிங்கமும் மற்றைய இருவரும்.
மேலும் ஒருங்கியல் நிரலில் (ஊழnஉரசசநவெ டளைவ) பல விடயங்களை உள்ளடக்கி மாகாணங்களின் அதிகாரங்களை மழுங்கடித்துவிட்டனர். அப்போதைய அரசாங்கத்தினர் இந்திய அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எமது மாகாணங்களுக்கும் வழங்கப்படும் என்றுவிட்டு மாகாண அதிகாரங்களைக் குறைத்து ஒருங்கியல் நிரலில் கூடிய விடயங்கள் உள்வாங்கப்பட்டன. உதாரணத்திற்கு சுற்றுலா ஒருங்கியல் விடயமாக்கப்பட்டதால் எமது மாகாண சுற்றுலாவை மத்தியரசானது கட்டுப்படுத்தி தான் நினைத்தவாறு நடக்க இடமளித்துள்ளது.
காணிபற்றியும் பல விடயங்கள் அக்கடிதத்தில் கூறப்பட்டன. காணி மீதான மாகாணத்தின் கட்டுப்பாட்டை மத்தியரசானது தனதாக்கிக் கொண்டதை எடுத்து விளக்கினார்கள் அமரர் அமிர்தலிங்கமும் மற்றைய இருவரும். இதனால்த் தான் இன்று வெளிமாகாணங்களில் இருந்து மக்களைக் கொண்டுவந்து குடியேற்ற அரசாங்கத்திற்கு இச்சட்டமும் மகாவலிச் சட்டமும் இடமளித்துள்ளன. காணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அன்றே அது பற்றி இயம்பியவர் அமரர் அமிர்தலிங்கம். மேலும் பல விடயங்களை அன்றே தீர்க்க தரிசனத்துடன் அன்னார் இந்திய அரசாங்கத்தின் அவதானத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
எனவே ஜனநாயக சூழலில் அவர் வாழ்ந்திருந்தால் நாங்கள் இன்று செய்ய விழையும் பல விடயங்களை அவரே எல்லோருக்கும் எடுத்துக்காட்டி உரிய தீர்வுகளைப் பெற்றுத் தந்திருப்பார். துரதிர்~;டவசமான அவரின் அகால மரணம் எம் மக்கள் மத்தியில் இருந்து நல்லதொரு தலைவனை எடுத்துச் சென்றுவிட்டது. அவரின் நினைவு நீடூழி காலம் வாழ வாழ்த்தி எனது நினைவுப் பேருரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com